(ஆர்.விதுஷா)

முன்னாள்  இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க  குற்றம் செய்திருந்தால் உரிய  வகையில்  சட்டத்தின் முன்  தண்டிக்கப்பட வேண்டுமே  தவிர  குரல்  பதிவுகளை  உள்நோக்கத்திற்காக  வெளியிடக்கூடாது  என  ஐக்கிய தேசிய  கட்சியின்  குருணாகல் மாவட்ட பாராளுமன்ற  உறுப்பினர்  ஜே.சீ. அலவத்துவல தெரிவித்தார்.

எதிர்க்கட்சித்தலைவர் காரியாலயத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனை  தெரிவித்தார்.தெரிவித்த அவர்  மேலும்  கூறியதாவது ,  

ரஞ்சன் ராமநாயக்கவின் விடயம்  தொடர்பில்  நாட்டு  மக்கள் தெளிவாகவுள்ளனர்.  அது ஐக்கிய தேசிய  கட்சியின் கலாச்சாரம் இல்லை.  

ஆகவே  , தான் அவர் கட்சியிலிருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளார்.  அத்துடன்,  அவர் கைது செய்யப்பட்டு  விசாரணைகளுக்கு  உட்படுத்தப்பட்டும் வருகின்றார்.  

அவர் குற்றம்  செய்திருக்கும் பட்சத்தில் அது தொடர்பில்  உரிய  சட்ட நடவடிக்கையை எடுப்பதற்கு ஏதுவாக சகல வாய்ப்பும்  இந்த அரசாங்கத்திற்கு உள்ளது. அந்த வகையில் அவருடைய  குரல்பதிவுகளை  இவ்வாறாக  வெளியிடாது சட்டநடவடிக்கை எடுக்குமாறே   அரசாங்கத்திடம் நாம் கேட்டுக்கொள்கின்றோம்.