ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.

விமானநிலையத்திற்கு திடீர் விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி அங்குள்ள குறைகள் மற்றும் பயணிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்துகொண்டார்.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ கடந்த சில நாட்களாக பொதுமக்கள் நலன்கருதி இவ்வாறு பொதுமக்கள் சேவை வழங்கும் இடங்களுக்கு திடீர் கண்காணிப்பு விஜயங்களை மேற்கொண்டு வருகின்றார்.

அந்தவகையில் கொழும்பு தேசிய வைத்தியசாலை, மோட்டார் போக்குவரத்து திணைக்களம் போன்றவற்றுக்கும் ஜனாதிபதி திடீர் கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.