(ஆர்.யசி)

தோட்டத் தொழிலாளர்களின் 1000 ரூபாய் சம்பள அதிகரிப்பிற்காக இலங்கை தேயிலை சபையிடம் இருந்து 37.5 மில்லியன் ரூபா கடன் பெறப்படும் என கூறப்படும் கருத்தினை இலங்கை தேசிய சபை நிராகரித்துள்ளது.

அதேபோல் தோட்டக் கம்பனிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் ஆகியவற்றுடன் பேச்சுவார்த்தை நடத்தி அடுத்த வாரமளவில் வேலைத்திட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவிக்கின்றது.

தோட்டத் தொழிலார்களின் 1000 ரூபா சம்பள அதிகரிப்பு விவகரம் குறித்து அதிகமாக கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையில் அரச தரப்பில் இருந்து இரு வேறுபட்ட கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

பெருந்தோட்ட துறை அமைச்சர் ரமேஷ் பத்திரன இது குறித்து கூறிகையில், வரிகளை குறைத்து அதில் இருந்து வரும் வருமானத்தில் 1000 ரூபாய் சம்பளம் வழங்கப்படும் என கூறியிருந்தார்.  

இந்நிலையில் இலங்கை தேயிலை சபை இது குறித்து எடுத்துள்ள தீர்மானம் என்னவென வினவிய போதே அதன் பணிப்பாளர் ஜயம்பதி மலால்கொட இதனைக் கூறினார்.