ஏஏவ்பீ

நேபாளத்தில் சிறுவர் காதல் திருமணங்கள் சமூக பிரச்சினையாக உருவெடுக்க ஆரம்பித்துள்ளன.

பதின்ம வயது ஆசா சார்ட் கார்க்கி கல்வி கற்க செல்வதாக  வீட்டில் தெரிவித்துவிட்டு சென்று தனது நண்பரை திருமணம் செய்துகொண்டார்.

இதன் மூலம் சமீபகாலங்களில்  பதின்ம வயதில் திருமணம் செய்துகொண்டுள்ள நேபாளத்தை சேர்ந்த இளையவர்களில் ஒருவராக இவர் மாறியுள்ளார்.

எனது கிராமத்தில் என்னைபற்றி பல கதைகள் பேசப்பட்டன, வீட்டில் சண்டை நடந்தது வேறு வழியின்றி நான் வீட்டை விட்டு ஒடினேன் என அவர் ஏஎப்பிக்கு தெரிவித்துள்ளார்.

சிறுவயது திருமணத்திற்கு ஐந்து தசாப்தங்களிற்கு முன்னர் நேபாளத்தில் தடைவிதிக்கப்பட்டுவிட்ட போதிலும் இன்னமும் சிறுவயது திருமணம் அதிகளவில் இடம்பெறும் நாடாக அது காணப்படுகின்றது.

நேபாளத்தில் திருமணம் செய்வதற்கான சட்டபூர்வ வயது 20 என்பது குறிப்பிடத்தக்கது.

25 முதல் 49 வயதிற்கு உட்பட்ட நேபாள பெண்களில் 50 வீதமானவர்கள் 18 வயதிற்கு முன்னரே திருமணம் செய்தவர்கள்.

பழமைவாத கொள்கைகளை பின்பற்றும் நேபாளத்தில் பெற்றோர்களால் நிச்சயிக்கப்படும் திருமணங்களே மரபாக காணப்படுகின்றன.

எனினும் பெற்றோர்களால் நிச்சயிக்கப்படும்  திருமணங்களின் எண்ணிக்கை குறைவடைந்து வருகின்றது என எச்சரிக்கை செய்யும்சிறுவர் உரிமை ஆர்வலர்கள் சிறுவயது காதல் திருமணங்கள் அதிகரித்துள்ளன என தெரிவித்துள்ளனர்.

இந்த நடைமுறைஅதிகரித்து வருகின்றதுஎன  சிறுவர் திருமணத்திற்கு எதிரான அமைப்பொன்று தெரிவித்துள்ளது.

இவ்வாறான சிறுவயது காதல் திருமணங்கள் எங்களிற்கும் அரசாங்கத்திற்கும் பிரச்சினையை உருவாக்கியுள்ளன,என தெரிவிக்கும் அந்த அமைப்பின் அனந் டமாங்க, இது உகந்த விடயமல்ல என எங்களால் பெற்றோருக்கு தெரிவிக்க முடியும் ஆனால் திருமணம் செய்ய நினைத்த  சிறுவயதினரைதடுப்பது கடினமாகவுள்ளது என தெரிவித்துள்ளார்.

சிறுவயது திருமணங்களால் மாணவர்கள் பாடசாலையிலிருந்து இடைநடுவில் விலகுதல்,குடும்ப வன்முறை,சகாதார பிரச்சினைகள் போன்றவை உருவாக்கலாம்  என அவர் தெரிவித்துள்ளார்.

யுவதிகள் தங்கள் குடும்பத்தவர்களின் ஆதரவை இழந்துவிடுகின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

திருமணம் முடித்தவுடன் பாடசாலை கல்வியை முடித்துக்கொண்டதாக தெரிவித்துள்ள கார்க்கி குடும்ப பாரத்தை சுமப்பதற்கு தான் மிகுந்த சிரமப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர் நான் கர்ப்பிணி என்பது தெரியவந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நான் 16 வயது கர்ப்பிணியானேன் அதனை புரிந்துகொள்ளும் வயதில்லை  அப்போது எனக்கு என தனதுஇரண்டு வயது மகளை தாலாட்டியபடி அவர் தெரிவித்துள்ளார்.

நான் எனது பெற்றோருக்கு பொய்சொல்லிவிட்டு வீட்டிலிருந்து ஓடினேன், ஆனால் நான் எனது எதிர்காலத்திறகு துரோகமிழைத்துவிட்டேன் எனஅவர் தெரிவித்துள்ளார்.

சிறுவயது கர்ப்பம் காரணமாக தான் உடல்நலப்பாதிப்புகளை சந்தித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நான் எனது நண்பிகளை பார்க்கும்போது நானும் அவ்வாறு இருந்தால்  எப்படி என யோசிப்பேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சில சிறுமிகள் வறுமை, கட்டாய திருமணம், குடும்பத்திற்குள்காணப்படும் குழப்பம் ஆகியவற்றிலிருந்து தப்புவதற்காகவே இவ்வாறு சிறியவயதில் திருமணம் செய்துகொள்கின்றனர்.

சிறியவயது காதல் என்பது நேபாளத்தின் கிராமப்பகுதிகளில் ஏற்றுக்கொள்ளப்படாத விடயமாக காணப்படுவதால் தாங்கள்வீட்டிலிருந்து ஓடிச்சென்று திருமணம் செய்வதே தங்கள் உறவை சட்டபூர்வமானதாக்குவதற்கான ஒரே வழி என அவர்கள் கருதுகின்றனர்.

சிலர் கர்ப்பம் தரிப்பதே ஒரே வழி என கருதுகின்றனர்.

இதேவேளை இது குறித்து அதிகாரிகளிற்கு அறிவிப்பதும் குறைவாக காணப்படுகின்றது.

இதனை கட்டுப்படுத்துவதற்கு முக்கியமான விடயம் கல்வி என்கின்றார் மகளிர் விவகார அமைச்சின் அதிகாரி கிருஸ்னா பிரசாத் பூசல்.பாலியல் ரீதியில் உறவை வைத்துக்கொள்வது திருமணத்திற்கு சமமானதாகாது என்பதை அவர்கள் உணரவேண்டும் , அறிந்திருக்கவேண்டும் என்கின்றார் அவர்.

நேபாள அரசாங்கம் சிறுவயது திருமணங்களை 2030ற்குள் முடிவிற்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.

அரசாங்கம் சிறைத்தண்டனையையும் அறிவித்துள்ளது. ஆனால் அடிப்படை பிரச்சினைகளிற்கு தீர்வை காண்பதன்மூலமே  இந்த பிரச்சினைக்கு தீர்வை காணலாம் என்பதை அரசாங்கம் ஏற்றுக்கொள்கின்றது.