இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையின் 2020 வீரர்கள் ஒப்பந்த பட்டியலில் இந்தியஅணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் டோனி இடம்பெறாதது அவரது எதிர்காலம் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை  2020 வீரர்கள் ஒப்பந்த பட்டியலை வெளியிட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை  நான்கு பிரிவில் இந்திய அணி வீரர்களைஉள்ளடக்கி பட்டியலை வெளியிட்டுள்ளது.

இந்திய அணியின் தலைவர் விராட்கோலி, ரோகித் சர்மா பும்ரா ஆகியோர் ஏ பிளஸ் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்

ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, புவனேஸ்வர் குமார், புஜரா, ரகானே, சி;க்கர் தவான் உட்பட பல வீரர்கள் ஏ பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

எனினும் கடந்த வருடம் ஏ பட்டியலில்  காணப்பட்ட மகேந்திரசிங் டோனி அந்த பட்டியலில்  இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

டோனி பட்டியலில் இருந்து நீக்கப்பட்டமை அவரது எதிர்காலம் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.