(நெவில் அன்­தனி)

தோட்டத் தொழி­லா­ளர்­களின் நாள் சம்­ப­ளத்தை 1,000 ரூபா­வாக அதி­க­ரிப்­ப­தற்கு அர­சாங்கம் தீர்­மா­னித்­துள்­ளதன் மூலம் பெருந்­தோட்­டத்­ து­றையில் வாழும் இளைஞர், யுவ­திகள் விளை­யாட்­டுத் ­து­றையில் கூடு தல் ஆர்வம் செலுத்­து­வார்கள் என நம்­பு­வ­தா­கவும் அவர்­க­ளிடம் உள்ள திற­மை­களை வெளிச்­சத்­துக்குக் கொண்டு வரும் வகையில் அவர்­களை விளை­யாட்­டுத்­து­றையில் ஈடு­ப­டுத்த விளை­யாட்­டுத்­ துறை அமைச்சர் நட­வ­டிக்கை எடுப்பார் என நம்­பு­வ­தா­கவும் பிர­தமர் மஹிந்த ராஜ­பக் ஷ தெரி­வித்தார்.

நாட்டின் விளை­யாட்­டுத்­துறை வளர்ச்­சிக்கு சர்­வ­தேச தரம்­வாய்ந்த விளை­யாட்­டுத்­துறை பல்­க­லைக்­க­ழகம் ஒன்று ஸ்தாபிக்­கப்­படும் எனவும் அவர் குறிப்­பிட்டார்.

நேபா­ளத்தில் கடந்த வருடம் நடை­பெற்ற 13ஆவது தெற்­கா­சிய விளை­யாட்டு விழாவில் பதக்­கங்கள் வென்ற வீர, வீராங்­க­னை­க­ளுக்கும் அவர்­க­ளது பயிற்­று­நர்­க­ளுக்கும் பணப்­ப­ரிசில் வழங்கி கௌர­விக்கும் நிகழ்வு கொழும்பு தாமரைத் தடாக மண்­ட­பத்தில் செவ்­வாய்க்­கி­ழமை

இரவு நடை­பெற்­ற­போது அதில் பிர­தம அதி­தி­யாகக் கலந்­து­கொண்டு உரையாற்றுகை யிலேயே பிர­தமர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அங்கு தொடர்ந்து பிர­தமர் மஹிந்த ராஜ­பக் ஷ தெரிவிக்கையில்,

"எமது அரசின் பிர­தான நோக்கம் யாதெனில், ஒழுக்கம் மிகுந்த தேசத்தைக் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தாகும். ஒழுக்கம் மிகுந்­த­வர்­களை உரு­வாக்­கு­வதில் விளை­யாட்­டுத்­துறை பெரும் ­பங்­காற்­று­வதை நாம் அறிவோம். அத­னால்தான் எமது கொள்கைப் பிர­க­ட­னத்தில் விளை­யாட்­டுத்­துறை குறித்து கூடுதல் கவ­னமும் அக்­க­றையும் செலுத்­தப்­பட்­டுள்­ளது. இதனை முன்­னிட்டு சர்­வ­தேச தரம்­வாய்ந்த விளை­யாட்­டுத்­ துறைப் பல்­க­லைக்­க­ழகம் ஸ்தாபிக்­கப்­படும். திய­க­மவில் உள்ள மஹிந்த ராஜ­பக் ஷ விளை­யாட்­டுத்­தொ­கு­தியில் இந்தப் பல்­க­லைக்­க­ழ­கத்தை அமைக்க விளை­யாட்­டுத்­துறை அமைச்சர் நட­வ­டிக்கை எடுத்­துள்ளார்.

சில பிர­தே­சங்­களில் விளை­யாட்டு வீரர்­க­ளுக்கு சரி­யான வாய்ப்­புகள் கிடைப்­ப­தில்லை. அந்த வாய்ப்­பு­களைத் தேடி நாம் செல்­ல­ வேண்டும். வீரர்­களைத் தேடி நாம் செல்­ல ­வேண்டும் என நான் நம்­பு­கின்றேன். எம்மைத் தேடி அவர்கள் வரு­வ­தில்லை.

காத்­மண்­டுவில் எமது வீர, வீராங்­க­னை­க­ளுக்கு போதிய வசதி, வாய்ப்­புகள் கிடைக்­காமை, சரி­யான முகா­மைத்­துவம் இன்றி அவர்கள் எதிர்­கொண்ட சிர­மங்கள், சிலர் கடும் நோய்­வாய்ப்­பட்­டமை ஆகி­யன குறித்து எமக்கு அறியக் கிடைத்­தது. ஆனால், தாய்­நாட்டின் வெற்­றிக்­காக எமது வீர, வீராங்­க­னை­க­ளி­ட­மி­ருந்த துணிச்­சலை யாராலும் தடுக்­க ­மு­டி­யாமல் போனது. அத­னால்தான் முழு தேசமும் உங்­களைக் கௌர­ விக்­கின்­றது.

'டன்கன் வைட் (1948), சுசந்­திகா ஜய­சிங்க (2000) ஆகியோர் பதக்­கங்கள் வென்­ற­போது, 1996 உலகக் கிண்ண கிரிக்­கெட்டில் இலங்கை சம்­பி­ய­னா­ன­போது இருந்த அதே பெருமை தெற்­கா­சிய விளை­யாட்டு விழாவில் நீங்கள் (வீர, வீராங்­க­னைகள்) வென்ற பதக்­கங்­களின் மூலமும் இருக்­கின்­றது என்­பதை நினை­வு­ப­டுத்­து­கின்றேன்.

'பொது­ந­ல­வாய விளை­யாட்டு விழாவை நம் நாட்டில் நடத்த நாம் எவ்­வ­ளவோ முயன்றோம். அந்த வாய்ப்பு அற்­றுப்­போ­னது. சில­ருக்கு அது கேலி­யாக இருந்­தது. அத்­த­கைய போட்­டி­களை நம் நாட்டில் நடத்­தினால் நமது விளை­யாட்டு வீர, வீராங்­க­னை­களின் தரத்தை உயர்த்­திக்­கொள்ள சந்­தர்ப்பம் உரு­வாகும். உண்­மை­யி­லேயே நமது நாட்டில் சர்­வ­தேச போட்­டி­களை நடத்த வேண்­டிய கட்­டாயம் தோன்­றி­யுள்­ளது. விளை­யாட்­டுத்­துறை பொரு­ளா­தா­ரத்தை உரு­வாக்க நட­வ­டிக்கை எடுக்­க­ வேண்டும். சர்­வ­சேத ரீதியில் புகழும் பெரு­மையும் ஈட்­டிக்­கொ­டுத்த வீர, வீராங்­க­னை­க­ளுக்கு பொரு­ளா­தார வச­தி­களைச் செய்­து­கொ­டுப்­ப­துடன் அவர்­களைப் பாது­காத்து, அவர்கள் மத்­தியில் எதிர்காலத்தின் மீது நம்பிக்கையைக் கட்டியெழுப்ப வேண்டும். அப்போதுதான் அவர்கள் சுதந்திரமாகச் செயற்பட முடியும்" என்றார்.

13ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவில் 40 தங்கம், 83 வெள்ளி, 128 வெண்கலப் பதக்கங்களை வென்றவர்க ளுக்கு விளையாட்டுத்துறை அமைச்சு மற்றும் விளையாட்டுத்துறை அபிவிருத்தித் திணைக்களத்தால் மொத்தமாக 85 மில்லியன் ரூபா பணப்பரிசாக வழங்கப்பட்டது.