பொதுத்­தேர்­தலில் சஜித் தலை­மை­யி­லேயே போட்டி - சுஜித் பெரேரா

16 Jan, 2020 | 01:00 PM
image

ஐக்­கிய தேசியக் கட்சி தலை­மை­யி­லான பரந்­து­பட்ட முன்­ன­ணி­யா­னது சஜித் பிரே­ம­தாச தலை­மை­யி­லேயே எதிர்­வரும் பொதுத்­தேர்­தலில் போட்­டி­யிட­வுள்­ளது. இதுவே கட்­சியின் கீழ்­மட்ட ஆத­ர­வா­ளர்கள் முதல் பெரும்­பான்­மை­யா­ன­வர்­களின் விருப்­பாக இருக்­கின்­றது என்று ஐக்­கிய தேசியக் கட்­சியின் கேகாலை மாவட்ட பாரா­ளுமன்ற உறுப்­பினர் சுஜித் பெரேரா வீர­கே­சரிக்கு வழங்­கிய செவ்­வியில் குறிப்­பிட்டார்.

அச்­செவ்­வியின் முழு­வ­டிவம் வரு­மாறு,

கேள்வி:- ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலை­மைப் ­பொ­றுப்­பி­லி­ருந்து வில­கு­வது குறித்து ரணில் விக்­கி­ர­ம­சிங்க தன்­னு­டைய நிலைப்­பா­டு­களை பகிர்ந்து கொண்­டுள்­ளாரா?

பதில்:- நாங்கள் கிரா­மங்­க­ளுக்குச் செல்­கின்­ற­போது ஐ.தே.கவின் ஆத­ர­வா­ளர்கள் கட்­சியின் தலைமை மாற்றம் குறித்த எதிர்­பார்ப்­புக்­களை வெளி­யிட்­டுள்­ளார்கள். எமது கட்­சியின் அனைத்து உறுப்­பி­னர்­களும் ஆத­ர­வா­ளர்­களின் கருத்­துக்­களை உள்­வாங்­கிய பின்­னரே கட்­சி­யினுள் கலந்­து­ரை­யா­டல்­களை ஆரம்­பித்­தி­ருந்­தனர். இருப்­பினும் தற்­போது வரையில் இறுதி முடி­வுகள் எடுக்­கப்­ப­ட­வில்லை. கலந்­து­ரை­யா­டல்கள் நீடித்­துக்­கொண்­டே­யி­ருக்­கின்­றன.

எவ்­வா­றா­யினும் கட்­சியின் பெரும்­பான்­மை­யான உறுப்­பி­னர்­களும் பங்­காளிக் கட்­சி­களும் பரந்­து­பட்ட கூட்­டணி­யொன்றை அமைத்து சஜித் பிரே­ம­தா­ஸ­வினை பிர­தமர் வேட்­பா­ள­ராக கொண்டு பொதுத்­தேர்­த­லுக்கு முகங்­கொ­டுப்­ப­தற்­கு­ரிய   நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்டு வரு­கின்­றன.

அடுத்த இரண்டு வாரங்­களில் கட்­சியின் தலை­மைத்­துவம் சார்ந்த பிரச்­சி­னைக்கு உரிய தீர்­வொன்றைப் பெற்­றுக்­கொள்ளும் அதே­நேரம் பல­மான அணி­யாக நாம் கள­மி­றங்­கு­வ­தற்கு திட்­ட­மிட்­டுள்ளோம்.

கேள்வி:- அப்­ப­டி­யாயின் அடுத்த பொதுத் ­தேர்­தலில் ரணில் விக்­கி­ர­ம­சிங்கவின் வகி­பாகம் எவ்­வா­றி­ருக்­கப் ­போ­கின்­றது?

பதில்:- அடுத்த பாரா­ளு­மன்றத் தேர்­தலில் அவர் கள­மி­றங்­கு­வாரா இல்லை பாரா­ளு­மன்றத் தேர்தல் போட்­டி­யினை தவிர்த்து அடுத்த ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யி­டு­வாரா என்­பது பற்றி உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அவர் எவ்­வி­த­மான கருத்­துக்­க­ளையும் எம்­மு­ட­னான கூட்டங்­க­ளின்­போது பகிர்ந்து கொள்­ள­வில்லை.

இருப்­பினும் அவர் தனது அர­சியல் வாழ்க்­கைக்கு சொற்­ப­கா­லத்தில் விடை­கொ­டுப்பார் என்ற எதிர்­பார்ப்பும் எம்மைப் ­போன்ற கட்­சியின் உறுப்­பி­னர்கள் பல­ருக்கு உள்­ளது.

எமது எதிர்­பார்ப்­பினை நிறை­வேற்றும் வகையில் அவர் தனது நீண்ட அர­சியல் வாழ்க்­கைக்கு விடை­கொ­டுப்­பா­ராயின் நாம் அவ­ருக்கு கௌரவ­மான பிரி­யா­விடை வழங்கி அனுப்­பி­வைப்­ப­தற்கும் தயா­ரா­கவே உள்ளோம். மேலும், அனைத்து தரப்­பி­ன­ரது எதிர்­பார்ப்­பினையும் பூர்த்­தி­செய்யும் வகையில் சஜித் பிரே­ம­தாஸ தலை­மையில் பல­மான புதிய கூட்­ட­ணியை ரணில் விக்­கி­ர­ம­சிங்க உரு­வாக்­கு­வ­தற்­கான ஒத்­து­ழைப்­புக்­களை வழங்க வேண்டும்.

கேள்வி:- மத்­திய குழு உறுப்­பி­னர்­களில் பெரும்­பான்­மையானோரை கட்­சித் ­த­லை­மையே நிய­மிக்­கின்­ற­மையால் தற்­போ­தைய தலை­மையும் தீர்­மா­னங்­களில் அதீத தலை­யீட்­டினை செய்ய முனைந்தால் குழப்­ப­மான நிலை­யொன்று ஏற்­ப­டு­மல்­லவா?

பதில்:- ஆம், மத்­திய செயற்­கு­ழு­வா­னது தற்­போது செய­லி­ழந்­துள்­ளது. எனினும் கட்­சி யாப்பின் பிர­காரம் மத்­திய செயற்­குழு உட்­பட அனைத்து அதி­கா­ரங்­களும் தலை­மை­யி­டத்தில் உள்­ளன. அதன் கார­ண­மா­கவே கட்­சித் ­த­லைமை மாற்­றத்­திலும் தாம­த­மான நிலை­மைகள் தொடர்ந்து கொண்­டி­ருக்­கின்­றன.

கேள்வி:- சிறு­பான்மை தரப்­புக்கள் உங்­க­ளது கூட்­ட­ணியில் அங்­கத்­து­வத்­தினைக் கொண்­டி­ருப்­பதால் சிங்­கள, பௌத்த வாக்­கு­களை பெறு­வ­தற்கு இம்­மு­றையும் சவால்கள் ஏற்­ப­டு­மல்­லவா?

பதில்:- ஐக்­கிய தேசியக் கட்­சி­யா­னது மூன்று இனங்­க­ளையும் உள்­ளீர்த்து உரு­வாக்­கப்­பட்­ட­து என்­பதே வர­லா­றாகும். ஆனால் ஐ.தே.க பற்றி தவ­றான நிலைப்­பா­டொன்றை எடுக்கும் வகையில் மக்கள் மத்­தியில் பிர­சா­ரங்கள்  திட்­ட­மிட்டு மேற்­கொள்­ளப்­பட்­டி­ருந்­தன.

அவ்­வா­றி­ருக்க, பொய்­யான பிர­சா­ரங்­களை மேற்­கொண்டு ஆட்சி அதி­கா­ரத்­தினைப் பெற்­றுள்ள தற்­போ­தைய தரப்­பி­னரின் செயற்­பா­டுகள் மூலம் அவர்­களின் சுய­ரூ­பத்­தினை உணர்ந்து கொள்­வார்கள். அதன் மூலம் எமது கட்­சி­யையும் கொள்­கை­க­ளையும் மக்கள் புரிந்து கொள்­வ­தற்கு சரி­யான சந்­தர்ப்பம் நிச்­ச­ய­மாக ஏற்­படும்.

எது எவ்­வா­றிருப்­பினும் இந்த நாடு பல்­லி­னங்­களைக் கொண்­டது என்­பதை ஏற்­றுக்­கொள்ள வேண்டும். சஜித் பிரே­ம­தாஸ தலை­மையில் அமையும் கூட்­ட­ணி­யா­னது அனைத்து இனங்­க­ளையும் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­து­வ­தாக அமையும். ஆகவே, பொய்­யான பிர­சா­ரங்கள் எமக்கு பின்­ன­டை­வு­களை ஏற்­ப­டுத்­தாது.

கேள்வி:- சர்ச்­சை­களை ஏற்­ப­டுத்­தி­யுள்ள பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ரஞ்சன் ராம­நா­யக்­கவின் ஒலிப்­ப­தி­வுகள் குறித்து எவ்­வா­றான நிலைப்­பாட்டைக் கொண்­டி­ருக்­கின்­றீர்கள்?

பதில்:- பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு ஒரு விடயம் சம்­பந்­த­மாக கலந்­து­ரை­யாடும் உரி­மைகள் காணப்­ப­டு­கின்­றன. ஆனால் அவற்றை இர­க­சி­ய­மாக ஒலிப்­பதிவு செய்து வைத்­துக்­கொள்­வது பொருத்­த­மற்ற செயற்­பா­டா­கின்­றது. அந்த வகையில், பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ரஞ்சன் ராம­நா­யக்­கவின் செயற்­பா­டுகள் ஏற்­றுக்­கொள்­ளத்­தக்­க­வை­யல்ல. அவற்றை நியா­யப்­ப­டுத்­தவும் முடி­யாது என்­பது தான் எனது நிலைப்­பா­டாகும்.

ஆனாலும், வெளி­யி­டப்­பட்­டுள்ள குரல்­ப­தி­வுகள் தொடர்பில் விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன. இந்­நி­லையில் நவீன தொழில்­நுட்­பத்தைப் பயன்­ப­டுத்தி புனை­யப்­பட்ட போலி­யான பல குரல்­ப­தி­வுகள் கடந்­த­ கா­லத்தில் வெளி­யி­டப்­பட்ட  அனு­ப­வங்­களும் எமக்கு இருக்­கின்­றன.

அத்­துடன் ரஞ்சன் ராம­நா­யக்­கவின் குரல்­ப­தி­வு­களில் குறிப்­பி­டப்­ப­டு­கின்ற விட­யங்கள் மூலம் அழுத்­தங்கள் பிர­யோ­கிக்­கப்­பட்­டது என்று உறு­தி­யாகக் கூற­மு­டி­யாது. ஆகவே முழு­மை­யான விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட வேண்­டி­யது அவ­சி­ய­மா­கின்­றது என்­ப­தோடு கட்­சியும் அவர் குறித்த தீர்­மா­னத்தை எடுக்கும்.

கேள்வி:- ஊழல், ­மோ­ச­டிகள், கடத்­தல்கள், படு­கொ­லைகள் தொடர்பில் நீதி­யான விசா­ரணை மேற்­கொள்­ளப்­படும் என்று வாக்­கு­றுதியளித்து ஆட்­சிப் ­பொ­றுப்­பினை ஏற்­றுக்­கொண்ட நீங்கள் அதனை நிறை­வேற்­றாது தற்­போது உங்­க­ளு­டைய உறுப்­பி­னர்கள் கைது செய்­யப்­ப­டு­கின்­ற­போது அர­சியல் பழி­வாங்­கல்கள் மேற்­கொள்­ளப்­ப­டு­வ­தாக விசனம் தெரி­வி­க்கின்­றீர்­களே?

பதில்:- நாங்கள் வாக்­கு­று­தி­களை வழங்கி ஆட்சி அதி­கா­ரத்­தை பெற்­றி­ருந்­தது உண்­மையே. ஆனால் நாம் தனித்து ஆட்சி அமைத்­தி­ருக்­க­வில்லை. ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­மைப்பின் பகு­தி­ய­ள­வான உறுப்­பி­னர்­களும் அர­சாங்­கத்தில் பங்­கேற்­றி­ருந்­தார்கள்.

ஊழல் மோச­டிகள் சம்­பந்­த­மாக ஆணைக்­கு­ழுக்­க­ளையும் விசேட நீதி­மன்­றங்­க­ளையும் அமைத்து படிப்­ப­டி­யாக நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்­துக்­கொண்­டி­ருந்­த­போதும் அவற்றை முழு­மை­யாக முன்­னெ­டுக்க முடி­யாது போனது. அத­னை­யிட்டு நாம் கவ­லை­ய­டை­கின்றோம்.

அர­சாங்­கத்­தி­ல் இ­ருந்­த­வர்கள் சிலரும் அழுத்­தங்­களைப் பிரயோகித்திருக்கலாம் என்ற சந்தேகங்கள் எமக்குள்ளன. கூட்டு அரசாங்கமாக நாம் இருந்ததன் காரணத்தால் வாக்குறுதிகளை நிறைவேற்ற முயன்றபோது சவால்களுக்கு முகங்கொடுக்க நேரிட்டது.

குறிப்பாக ராஜபக் ஷவினருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட அதிகாரிகள் தொடர்பிலும் விமர்சனங்கள் இல்லாமலில்லை. ஆகவே, அவையனைத்தும் எமது வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு இடையூறுகளாக இருந்துள்ளன.

ஆனால், தற்போதைய ஆட்சியாளர்கள் முறையாக எந்த விடயங்களையும் முன்னெடுக்கவில்லை. குற்றமிழைத்தவர்களை கைதுசெய்து விசாரணைகள் மேற்கொள்ளக்கூடாது என்று நாம் கூறவில்லை. ஆனால் அதற்கான நியமங்கள் உள்ளன.

பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை கைது செய்வதானால் அதற்குரிய நியமங்களை பின்பற்ற வேண்டும். இதனைவிடுத்து, இரவு வேளைகளில் தேடுதல்களை மேற்கொண்டு வேட்டையாட விளைவது அரசியல் பழிவாங்கலே. அதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

நேர்காணல் - ஆர்.ராம் 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

Factum கண்ணோட்டம்: ரைசியின் மரணத்தின் மூலம்...

2024-06-12 18:03:09
news-image

இலங்கை ஒருகாலத்தில் செய்தது போல இஸ்ரேல்...

2024-06-12 10:58:31
news-image

தேர்தல் நிச்சயமற்ற தன்மையே பொருளாதார மீட்சியை...

2024-06-11 15:21:50
news-image

தமிழ் பொது வேட்பாளர் குறித்த கரிசனைகளை...

2024-06-10 18:29:19
news-image

தமிழ் பொது வேட்பாளரால் தமிழ் கட்சிகளுக்குள்...

2024-06-10 18:24:08
news-image

அரசாங்கத்தின் மறைமுக எச்சரிக்கையை உணரவில்லையா கம்பனிகள்?...

2024-06-10 17:59:48
news-image

இடம்பெயர்ந்து வரும் பாலஸ்தீனியர்கள் போல வந்து...

2024-06-10 16:19:25
news-image

இரத்தினபுரி மாவட்ட தமிழர் அரசியல்…! :  ...

2024-06-10 10:50:01
news-image

ஒரே இரவில் மாற்றத்தை ஏற்படுத்த முடியுமா?

2024-06-10 10:38:40
news-image

தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை உறுதிப்படுத்த தமிழ்...

2024-06-10 10:27:47
news-image

வெளியிடப்படாத நவாஸ் ஆணைக்குழு அறிக்கை ஏற்புடைய...

2024-06-09 17:31:23
news-image

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்துடன் தகவல்களைப் பகிர்வதற்கான...

2024-06-09 19:16:51