(செ.தேன்மொழி)

அங்குணுகொலபெலெஸ்ஸ பகுதியில் துப்பாக்கி, தோட்டா மற்றும் வாளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அங்குணுகொலபெலெஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உஸ்வௌ பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் போதே சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

உஸ்வல பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன் , இவரிடமிருந்து மூன்று வகையான உள்நாட்டு துப்பாக்கிகள் , 16 மில்லி மீற்றர் துப்பாக்கி தோட்டா மற்றும் வாள் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அங்குணுகொலபெலெஸ்ஸ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.