(எம்.எப்.எம்.பஸீர்)
நீதிபதிகள் தமது கடமைகளை முன்னெடுக்கும் போது சட்ட ரீதியாக எந்த அதிகாரமும் இன்றி அவர்களுக்கு அழுத்தம் கொடுத்தமை அல்லது அழுத்தம் கொடுக்க முயற்சித்தமை தொடர்பிலான குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட முன்னாள் பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவை எதிர்வரும் 29 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நுகேகொட நீதிவான் வசந்த குமார இன்று உத்தரவிட்டார்.
சந்தேக நபரான ரஞ்சன் ராமநாயக்க, இன்று பிற்பகல் 1.45 மணியளவில் நுகேகொட நீதிவான் வசந்த குமாரவின் மஹரகம - நீலம் மஹர உத்தியோகபூர்வ இல்லத்தில் ஆஜர்செய்யப்பட்ட போதே இவ்வாறு விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார்.
அத்துடன் எதிர்வரும் 23 ஆம் திகதி ரஞ்சன் ராமநாயக்கவை குரல் சோதனைக்காக அரச இரசாயன பகுப்பாய்வளர் திணைக்களத்தில் ஆஜர் செய்யுமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு நீதிவான் உத்தர்விட்டார்.
ரஞ்சன் ராமநாயக்க தொடர்பில் மேல் மாகாண தெற்கு குற்றத் தடுப்புப் பிரிவினர் முன்னெடுத்த விசாரணைகள் குறித்து நுகேகொட மேலதிக நீதிவான் முன்னிலையில் 42/2020 எனும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அது குறித்த வழக்கிலேயே, அவரது வீட்டை சோதனை செய்ய அனுமதி பெற்ற அந்த விசாரணைப் பிரிவினர், அவரது வீட்டிலிருந்து பல்வேறு குரல் பதிவுகள் அடங்கிய சி.டி.க்கள், கணினி உள்ளிட்ட சந்தேகத்துக்கு இடமான பொருட்களையும் ஆவணங்களையும் மீட்டிருந்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM