(எம்.மனோசித்ரா)

குருணாகல் - நயிலிய புகையிரத நிலையத்திற்கு அருகிலுள்ள புகையிரத கடவையில் இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளனர். 

காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்துக்கு பயணித்த  புகையிரதத்துடன் வேன் மோதியதால் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. 

புகையிரத கடவையில் கவனக்குறைவாக வேனை செலுத்தியமையே விபத்துக்கான காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விபத்தில் உயிரிழந்தவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 25 வயதுடைய பிரபாத் தென்னகோன் என்ற சகோதரனும் 27 வயதுடைய அனுஷ்கா சமன் குமாரி என்ற அவரது சகோதரியுமாவர். 

இவர்கள் மாவத்தகம , தஹபத்வல - ரத்மல் கஹபிடியவத்த பிரதேசத்தை சேர்ந்தவர்களாவர். 

விபத்தில் வேன் முழுமையாக சேதமடைந்துள்ளதோடு நயிலிய புகையிரத நிலையத்துக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.