மிலேனியம் சவால் ஒப்பந்தம் குறித்து அமெரிக்க துணைச் செயலர் அழுத்தம் கொடுக்கவில்லை - அரசாங்கம் 

Published By: Priyatharshan

15 Jan, 2020 | 01:49 PM
image

(இராஜதுரை ஹஷான்)

அமெரிக்காவின்  மிலேனியம் சலன்ச் கோர்பரேசன்  நிறுவனத்துடனான (எம்.சி. சி) ஒப்பந்தம் குறித்து அமெரிக்க துணைச்செயலர்  அலைஸ் வெல்ஸ் அரசாங்கத்திற்கு எவ்வித அழுத்தங்களையும் பிரயோகிக்கவில்லை. 

இரு நாட்டு மக்களின் அபிப்ராயங்களுக்கு முரணாக எவ்வித ஒப்பந்தங்களையும் செய்துகொள்ள முடியாது என  துணைச்செயலர் குறிப்பிட்டமை வரவேற்கத்தக்கது என அமைச்சரவை பேச்சாளர்  பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

கடந்த  திங்கட்கிழமை  இலங்கைக்கு  விஜயம் மேற்கொண்ட  தெற்கு மற்றும் மத்திய  ஆசிய  விவகாரங்களுக்கான  அமெரிக்க  இராஜாங்க துணைச்செயலர்  அலைஸ் வெலஸ்  எ. ம். சி. ஒப்பந்தம் குறித்து  அரசாங்கத்திற்கு அழுத்தம்  பிரயோகித்ததாகவும், அரசாங்கம் அதற்கு  எவ்வித   பதிலும் குறிப்பிடவில்லை என்றும் பொய்யான  செய்திகள்    சமூக வலைத்தளங்களில் வெளியானது . இவ்விடயம் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து தெளிவுப்படுத்த வேண்டியது அவசியமாகும்.

அமெரிக்காவின் இராஜதந்திரிகள் நாட்டுக்கு  விஜயம் மேற்கொண்டால் அதனை மாறுப்பட்ட அரசியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொள்வது  முற்றிலும் தவறானதாகும்.  தற்போது விஜயம்  மேற்கொண்ட  அமெரிக்க துணைச்செயலர்  எம். சி. சி  ஒப்பந்தம் குறித்து  எவ்விதமான அழுத்தங்களையும்  அரசாங்கத்திற்கு பிரயோகிக்கவில்லை. இவ்வொப்பந்தம் குறித்து    முறையான  நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்ற து  என்பதனை அவர்  நன்கு அறிந்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55