பெருந்தோட்ட பிராந்தியத்திற்கான புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகாரசபையின்  பணிப்பாளர் சபையின் தலைவராக தலைவராக காந்தி செளந்தரராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். 

சமூக அபிவிருத்தி தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் சிபார்சின் பேரில் இதற்கான நியமனத்தை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ வழங்கியுள்ளார். 

ஜனாதிபதியின் செயலாளர் பி.பி.ஜெயசுந்தர இந்த நியமனத்திற்கான கடிதத்தை சமூக அபிவிருத்தி தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் செயலாளருக்கு  அனுப்பிவைத்துள்ளார்.