இந்தியா பாக்கிஸ்தானில் பனிச்சரிவில் சிக்கி70 பேர் பலியாகியுள்ளனர்.

பாக்கிஸ்தானில் 57 பேர் பலியாகியுள்ளனர் எனவும் இரண்டுபேர் காணாமல்போயுள்ளனர் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாக்கிஸ்தானின் கட்டுப்பாட்டில் உள்ள காஸ்மீரிலேயே இந்த இழப்புகள் ஏற்பட்டுள்ளன.

இதேவேளை இந்தியாவின் காஸ்மீரிலும் பனிச்சரிவு காரணமாக பத்துபேர் உயிரிழந்துள்ளனர்.

பாக்கிஸ்தானின் நீலும் பள்ளத்தாக்கில் கடும் மழையின் பின்னர் இடம்பெற்றுள்ள பனிச்சரிவு காரணமாக பல கிராமத்தவர்கள் சிக்குண்டுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த பகுதியில் மண்சரிவும் ஏற்பட்டுள்ளது.

மீட்பு பணிகள் இடம்பெறுகின்றன பலர் காணாமல்போயுள்ளனர் அவர்கள் உயிரிழந்திருக்கலாம் என  அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாக்கிஸ்தானின் தென்மேற்கு பலோச்சிஸ்தானில் இடம்பெற்ற பனிப்பொழிவு காரணமாக பலவீடுகள் அழிந்துபோயுள்ளன 17 பேர் உயிரிழந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாக்கிஸ்தான் ஆப்கானிஸ்தானிற்கு இடையிலான முக்கிய நெடுஞ்சாலைகள் பனிப்பொழிவினால் பாதிக்கப்பட்டுள்ளன இதனால் ஆப்கானிஸ்தானிற்கான விநியோகங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்திய பாக்கிஸ்தான் எல்லையில் உயிரிழந்தவர்களில் ஐவர்  இந்திய படையினர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.