காட்டு தீயால் உருவாகியுள்ள மோசமான புகைமண்டலத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மெல்பேர்னில் இடம்பெற்றுவரும் அவுஸ்திரேலிய ஓபன் டெனிஸ் தொடரின் நடுவில் இருமலால் பாதிக்கப்பட்ட வீராங்கனையொருவர் போட்டியிலிருந்து விலகியுள்ளார்.

சுவிஸ் வீராங்கனைக்கு எதிராக விளையாடிக்கொண்டிருந்த ஸ்லோவேனிய வீராங்கனை டலியா ஜகுபொவிக் தீடீர் நிலத்தில் விழுந்து பலமாக இருமத்தொடங்கினார்.

அதன் பின்னர் அவருடன் உரையாடிய நடுவரும் அதிகாரிகளும் அவரை அங்கிருந்து அழைத்து சென்றதுடன் போட்டி கைவிடப்பட்டது.

என்னால்நடக்க முடியவில்லை நான் நிலத்தில் விழுந்து விடுவேனோ  என அஞ்சினேன் என அவர் பின்னர் தெரிவித்துள்ளார்.

எனக்கு ஆஸ்மா பிரச்சினையோ சுவாசப்பிரச்சினையோ இல்லை என குறிப்பிட்டுள்ள அவர் என்னால் சுவாசிக்க முடியாத நிலையேற்பட்டது அதனால் நிலத்தில் விழுந்தேன் என குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான நிலைமைகளில் விளையாடுமாறு கேட்பது நியாயமான விடயமல்ல, இன்றைய சூழ்நிலையில் எங்களை விளையாடுமாறு கேட்டவேளை நான் ஆச்சரியமடைந்தேன் எனஅவர்தெரிவித்துள்ளார்.

இதேவேளை உலகின் முன்னணி வீராங்கனை மரியா சரபோவா விளையாடிய சினேகபூர்வபோட்டியொன்றும் இன்று மெல்பேர்னில் கைவிடப்பட்டுள்ளது.

நான் சுவாசிக்கமுடியாமல் இருமினேன் என மரியா சரபோவா தெரிவித்துள்ளார்.