புதுடில்லி மாணவியை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தி அவரின் மரணத்திற்கு காரணமான குற்றவாளிகளில் இருவர்தங்களிற்கு விதி;க்கப்பட்டுள்ள மரணதண்டனைக்கு எதிராக தாக்கல் செய்திருந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

நிர்பயா விவகாரத்தில் எதிர்வரும் 22 ம் திகதி தூக்கிலிடப்படவுள்ள குற்றவாளிகளில் இருவரான வினய்சர்மா முகேஸ் இருவரும் தாக்கல் செய்திருந்த மனுவை ஐந்து நீதிபதிகள் அடங்கிய குழுவினர் தள்ளுபடி செய்துள்ளனர்.

வினய் குமார் என்ற குற்றவாளி தனக்கு எதிரானஅரசியல் பக்கசார்பு குறித்து  விசாரணை  இடம்பெறவேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

எனக்கு மரணதண்டனையை நிறைவேற்றுவது எனது குடும்பம்முழுவதையும்அழித்துவிடும் என குறிப்பிட்டிருந்த வினய்குமார் எனது தந்தை சிறிதளவு பணத்தையே உழைக்கின்றார் எங்களிடம்சேமிப்பு எதுவுமில்லை என குறிப்பிட்டிருந்தார்.

இதேவேளை வினய்சர்மாவின் சட்ட்தரணி தாக்கல் ஜனாதிபதியிடம் கருணை மனுவை தாக்கல் செய்யப்போவதாக குறிப்பிட்டுள்ளார்.