விடுதலைப் புலிகளின் ஈழக்கனவினை சர்வதேசத்தின் உதவியுடன்  தகர்த்தெறிவோம். அந்தக் கனவு ஒரு போதும் நிறைவேறாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். 

அனைத்து மக்களும் சமத்துவத்துடன் வாழும் நாட்டை உருவாக்குவேன் இதன்போது விமர்சனங்களுக்கு அஞ்சமாட்டேன் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். 

தெஹிவளை நகர  மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் முக்கியஸ்தரான சி.வி. குணரத்ன புலிகளின் குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்டு 16 ஆவது வருட நினைவு தின நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.