(ஆர்.விதுஷா)

வாக்குறுதிகளை  நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றிக்கொண்டிருக்கும் அரசாங்கம்  என ஐக்கிய தேசிய  கட்சியின்  கம்பஹா  மாவட்ட பாராளுமன்ற  உறுப்பினர் காவிந்த  ஜெயவர்தன  தெரிவித்தார். 

புதிய  அரசாங்கம்  ஆட்சிக்கு வந்து 58 நாட்கள் கடந்துள்ள  போதிலும் , எத்தகைய  அபிவிருத்தி திட்டங்களும் முன்னெடுக்கப்டவில்லை  என்பதுடன்,   நாட்டு மக்களை  ஏமாற்றும் வகையிலான  செயற்பாடுகளையே அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக காவிந்த தெரிவித்துள்ளார். 

மூன்றில்  இரண்டு பெரும்பான்மை இன்றி ஆட்சி அமைக்க  முடியாது  என்று  அரசாங்க  தரப்பினர் கூறிக்கொள்ளும்  நிலையில் 42  உறுப்பினர்களுடன் ஆட்சி அமைத்த  கடந்த அரசாங்கம் 100 நாள்  திட்டம் உள்ளிட்ட பாரிய  அபிவிருத்தி திட்டங்களை   மேற்கொள்ள முடியாமையை நினைவில்  கொள்ள வேண்டும் என்றும் அவர் மேலும்  குறிப்பிட்டார். 

எதிர்க்கட்சி தலைவர்  அலுவலகத்தில் இன்று  செவ்வாய்க்கிழமை இடம் பெற்ற  ஊடகவியாலாளர்  சந்திப்பின் போது இதனை தெரிவித்தார்.