உக்ரைன் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டமை தொடர்பில் பலரை கைதுசெய்துள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது.

ஈரானின் நீதி;த்துறை பேச்சாளர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய  பலர் ஏற்கனவே கைதுசெய்யப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்.

எனினும் எத்தனை பேர்கைதுசெய்யப்பட்டனர் என்பதுஉட்பட மேலதிக தகவல்களை அவர் வெளியிடவில்லை.

இதேவேளை செவ்வாய்கிழமை  நாட்டு மக்களிற்கு ஆற்றிய உரையில் ஈரான் ஜனாதிபதி ஹசன் ருகானி மன்னிக்க முடியாத தவறு குறித்துமுழுமையான விசாரணைகள் இடம்பெறும் என வாக்குறுதியளித்துள்ளார்.

ஈரானிய படையினர் தங்கள் தவறை ஏற்றுக்கொண்டுள்ளமை  முதலாவது சாதகமான நடவடிக்கை என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டமைக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்கள், ஈரான் மக்களிற்கும் தங்கள் பிரஜைகளை இழந்தநாடுகளிற்கும் ஈரான் பொறுப்புக்கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

விசேட நீதிமன்றம் விசாரணைகளை மேற்கொள்ளும் எனவும்அவர்தெரிவித்துள்ளார்.