சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று நண்பகல் ஒரு மணிக்கு கூடிய பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றம் கூடிய போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கயிடம் கேள்வி எழுப்பும் நேரத்தில் ஒலிவாங்கி கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பாராளுமன்றக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, குறித்த விவாதம் நாளை இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதம் இன்று இடம்பெறுவதாக இருந்தது.