யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் உள்ள முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி கேசவன் சயந்தனின் அலுவலகத்திற்கு முன்னால் ஆட்லறி எறிகணைகள் இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் கண்டுபிடிப்பு. 

குடிநீர் குழாய்கள் பொருத்துவதற்கு நிலத்தைத் தோண்டிய போது இவ்வெடிபொருட்கள் காணப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக உடனடியாக சாவகசசேரி பொலிஸாருக்கும் இராணுவத்தினருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

குறித்த இடத்தில் மேலும் பல வெடிபொருட்கள் இருக்கலாம் என அப்பகுதிக்கு விரைந்த இராணுவத்தினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.