தேசிய தைப்­பொங்கல் நிகழ்வை இரத்து செய்­தமை கவ­லைக்­கு­ரி­யது: தமிழ்-முஸ்லிம் சமூ­கத்தின் தனித்­து­வத்­துக்கு அர­சாங்கம் மதிப்­ப­ளிக்க வேண்டும்

Published By: J.G.Stephan

14 Jan, 2020 | 12:33 PM
image

(இரா­ஜ­துரை ஹஷான்)

பல்­லின மக்கள் வாழும் நாட்டில் அனைத்து மக்­களின் மத கலா­சா­ரங்­க­ளுக்கும் பார­பட்­ச­மின்­றிய   விதத்தில் முன்­னு­ரிமை  கொடுக்க வேண்டும். 2020ஆம் ஆண்­டுக்­கான தேசிய தைப்­பொங்கல்   நிகழ்­வை அர­சாங்கம்  உரிய   கார­ணங்கள் இன்றி  இரத்து செய்­தது  கவ­லைக்­கு­ரி­யது. பிற மதங்­களின் தனித்­து­வத்துக்கும் அர­சாங்கம் முன்­னு­ரிமை  கொடுத்தால் மாத்­தி­ரமே தேசிய  நல்­லி­ணக்­கத்தைக் கட்­டி­யெ­ழுப்ப முடியும் என்று பாரா­ளு­மன்ற உறுப்­பினர்  காவிந்த ஜய­வர்­தன  தெரி­வித்தார்.

இது­ கு­றித்து அவர் மேலும் கருத்துத் தெரி­விக்­கையில்,

மூன்று இனத்­த­வர்­க­ளையும் ஒன்­றி­ணைத்து கடந்த  ஐந்து வருட கால­மாக  கொண்­டா­டிய தேசிய தைப்­பொங்கல்  தின நிகழ்­வுகள் இம்­முறை  இரத்து செய்­யப்­பட்­டுள்­ளமை  தமிழ் மக்­க­ளுக்கு எதி­ரான   செயற்­பா­டா­கவே கருத முடியும்.    கொண்­டாட்­டங்­களின் ஊடா­கவே தேசிய நல்­லி­ணக்கம் கட்­டி­யெ­ழுப்­பப்­படும்.  ஓர் இனத்தின்   மத கலா­சா­ரங்­களை பிறி­தொரு இனத்­தவர் புரிந்துகொள்­வது அவ­சி­ய­மா கும்.

கடந்த  ஐந்து வருட  கால­மாக   25 மாவட்­டங்­க­ளையும் ஒன்­றி­ணைத்த வகையில்  நத்தார்,  தைப்­பொங்கல்,  ரமழான் ஆகிய  பண்­டி­கைகள் தேசிய விழா­வாக  இளைஞர், யுவ­தி­க­ளினால்  வெகு­வி­மர்­சை­யாக கொண்­டா­டப்­பட்­டன. நாளை  கொண்­டா­ட­வுள்ள  தைப்­பொங்கல் தின  நிகழ்­வுகள்  நுவ­ரெ­லியா மாவட்­டத்தில்  கொண்­டாட தீர்­மா­னிக்­கப்­பட்­டி­ருந்த நிலையில்    எவ்­வித உரிய  கார­ணங்­க­ளு­மின்­றிய விதத்தில் இரத்து செய்­யப்­பட்­டுள்­ளமை  கவ­லைக்­கு­ரி­யது. ஓர்  இனத்­துக்கும்,  கலா­சா­ரங்­க­ளுக்கும் மாத்­திரம்  முன்­னு­ரிமை  அரச ரீதியில் வழங்­கப்­படும் பட்­சத்தில்  அங்கு முரண்­பா­டு­களே தோற்றம் பெறும்.   இதற்கு  வர­லாற்றுச்  சம்­ப­வங்கள்  சான்று பகர்­கின்­றன.  இதனை  அர­சாங்கம் புரிந்­து­கொள்ள வேண்டும்.  பல்­லின  சமூகம் வாழும் நாட்டில் அனைத்து மக்­களின்    தனித்­து­வத்­துக்கும் முன்­னு­ரிமை கொடுத்தால் மாத்­தி­ரமே அங்கு  ஜன­நா­யகம்    நடை­மு­றையில் செயற்­ப­டுத்­தப்­படும்.  இன்று   இந்­நிலை கேள்­விக்கு­றி­யாக்­கப்­பட்­டுள்­ளது.

நல்­லாட்சி அர­சாங்­கத்தில் அனைத்து இன மக்­களின் தனித்­து­வங்­க­ளுக்கும் முன்­னு­ரிமை கொடுக்­கப்­பட்­டது.  2016ஆம் ஆண்டு   சுதந்­திர தின நிகழ்வில்   தேசிய  கீதம் தமிழ் மொழியில்  பாடப்­பட்­டதை இன்று    ஆளும்  தரப்­பினர்  அர­சி­ய­ல­மைப்­பிற்கு  முர­ணான செயல் என்று குறிப்­பி­டு­கின்­றார்கள்.     ஒரு மொழியை  அர­சியல் தேவை­க­ளுக்­காக  புறக்­க­ணிப்­பதால் எவ்­வித  நடை­மு­றைக்கு சாத்­தி­ய­மான விட­யங்­களும் தோற்­றம்­ பெ­றாது. அவை  எதிர்காலத்திலே  மாறுபட்ட  தாக்கங்களை ஏற்படுத்தும். ஆகவே அரசாங்கம் அனைத்து இன மக்களையும் ஒன்றிணைத்தே  செயற்பட வேண்டும்.  தமிழ், - முஸ்லிம்  மக்களின்  தனித்துவங்களுக்கு மதிப்பளித்து  தேசிய  நல்லிணக்கத்தைக்   கட்டியெழுப்ப வேண்டியது  அவசியமாகும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56