வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரிட்பும்ரா வலைப்பயிற்சிகளின் போது எங்கள் தலைiயை குறிவைக்க தயங்கமாட்டார் என இந்திய அணியின் தலைவர் விராட்கோலி தெரிவித்துள்ளார்.

இன்று மூன்றுவகையான போட்டிகளிலும் பும்ராவே மிகவும் திறமையான வேகப்பந்து வீச்சாளர் என குறிப்பிட்டுள்ள கோலி வலைப்பயிற்சிகளின் போது அவர் மிகவும் தீவிரமாக பந்து வீசுவார்என குறிப்பிட்டுள்ளார்.

வலைப்பயிற்சிகளின் போது எங்கள் தலைiயை இலக்குவைப்பதற்கும் உடலை தாக்குவதற்கும் அவர்ஒருபோதும் தயங்குவதில்லை என விராட்கோலி குறிப்பிட்டுள்ளார்.

பும்ரா மிகவும் நேர்த்தியான சரியான பந்து வீச்சாளர் வலைப்பயிற்சியின் போது எதிர்கொள்வது மிகச்சிறந்த விடயம் எனவும்  விராட்கோலி தெரிவித்துள்ளார்.

வலைப்பயிற்சியின் போது அவருக்கு எதிராக சிறப்பாக விளையாடவேண்டும் என நான் உறுதியெடுத்துக்கொள்வேன் எனவும் குறிப்பிட்டுள்ள கோலி வலைப்பயிற்சிகளின் போது அவரது பந்தை எல்லைகோட்டிற்கு அடிப்பது கடினம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை அவுஸ்திரேலியாவிற்கு எதிரான ஒரு நாள் தொடர் குறித்துகுறிப்பிட்டுள்ள விராட்கோலி  அவுஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் மிச்செல் ஸ்டார்க்கினை எதிர்கொள்வது இந்திய நடுவரிசை ஆட்டக்காரர்களிற்கு மிகவும் சவாலாக அமையப்போகின்றது என குறிப்பிட்டுள்ளார்.