113 ஆச­னங்­க­ளையும் விட அதி­க­மாக பெற்று சஜித்தை பிர­த­ம­ராக்­குவோம்; ஐக்­கிய தேசிய கட்சி சூளுரை

Published By: J.G.Stephan

14 Jan, 2020 | 11:46 AM
image

(நா.தனுஜா)

நாட்டின் முக்­கிய பிரச்­சி­னை­களை விட்­டு­விட்டு, சிறிய விட­யங்கள் மூலம் மக்­களின் கவ­னத்தைத் திசை­தி­ருப்பி அத­னூ­டாகப் பொதுத்­தேர்­தலில் வாக்­கு­களைப் பெற்­றுக்­கொள்­வ­தற்கு அர­சாங்கம் முயற்­சிக்­கக்­கூ­டாது.   இத்­த­கைய பொய் வாக்­கு­று­தி­களை வழங்கும் தரப்பைத் தோற்­க­டித்து எதிர்­வரும் பொதுத்­தேர்­தலில் 113 ஆச­னங்­க­ளையும் விட அதிக ஆச­னங்­களைப் பெற்று சஜித் பிரே­ம­தா­ஸவை பிர­த­ம­ராக்­குவோம் என்று ஐக்­கிய தேசியக் கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் விஜே­பால ஹெட்­டி­யா­ராச்சி தெரி­வித்தார்.

ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலை­மை­ய­க­மான சிறி­கொத்­தாவில் நேற்று திங்­கட்­கி­ழமை ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே அவர் இவ்­வாறு குறிப்­பிட்டார். 

அங்கு அவர் மேலும் கூறி­ய­தா­வது:

புதிய அர­சாங்கம் நாட்டின் ஆட்­சிப்­பொ­றுப்பை ஏற்­றுக்­கொண்­டுள்ள நிலையில், பொருட்­களின் விலை­களைக் குறைப்­ப­தற்­காகப் பொது­மக்கள் ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­ன­விற்கு வாக்­க­ளிக்­க­வில்லை என்று அண்­மையில் இரா­ஜாங்க அமைச்­ச­ரொ­ருவர் கூறு­கிறார். ஆனால் அரி­சிக்கும், மரக்­க­றி­க­ளுக்கும் உயர்­வான விலையைச் செலுத்­து­வ­தற்­கா­கவும் மக்கள் அவர்­க­ளுக்கு வாக்­க­ளிக்­க­வில்லை என்­பதை ஞாப­கப்­ப­டுத்த விரும்­பு­கின்றேன். தேர்தல் பிர­சா­ரத்தின் போது பொருட்கள் மற்றும் எரி­பொருள் விலையைக் குறைப்­ப­தாகக் கூறி­ய­வர்­களே தற்­போது இவ்­வாறு பேசு­கின்­றனர்.

இவ்­வா­றா­ன­தொரு நிலையில் எதிர்­வரும் பொதுத்­தேர்­தலில் தற்­போ­தைய அர­சாங்­கத்­திற்கு மூன்றில் இரண்டு பெரும்­பான்மைப் பலத்தைப் பெற்­றுக்­கொ­டுக்­கு­மாறு பௌத்த தேர­ரொ­ருவர் கோரு­கின்றார். எதிர்க்­கட்­சி­யாக இருக்­கின்ற போதிலும் நாட்­டு­மக்­களை முன்­நி­றுத்­திய, அவர்­க­ளுக்கு நிவா­ர­ண­ம­ளிக்கக் கூடி­ய­வா­றான திட்­டங்­க­ளுக்கு முழு­மை­யான ஆத­ரவை வழங்­கு­வ­தற்குத் தயா­ராக இருப்­ப­தாக எதிர்க்­கட்சித் தலைவர் சஜித் பிரே­ம­தா­ஸவும், ஐக்­கிய தேசிய முன்­ன­ணியும் பகி­ரங்­க­மாக அறி­வித்­தி­ருக்­கின்ற நிலையில் அவர்கள் ஏன் பெரும்­பான்­மையைக் கோரு­கின்­றார்கள் என்று புரி­ய­வில்லை.

அதே­போன்று ஆளுந்­த­ரப்பின் மற்­று­மொரு பாரா­ளு­மன்ற உறுப்­பினர், இனி ஜன­நா­யகம் தொடர்பில் பேசிப்­ப­ய­னில்லை என்றும் ஏகா­தி­பத்­தி­ய­வா­தத்தின் ஊடா­கவே நாட்டை நிர்­வ­கிக்க வேண்டும் என்றும் கூறு­கின்றார். ஆனால் சட்­டத்தின் பிர­காரம் செயற்­படும் நியா­யா­திக்க அரசை உரு­வாக்­கு­வ­தாக தேர்­த­லுக்கு முன்னர் வாக்­க­ளித்­தார்கள். மேலும் தற்­போது அர­சி­ய­ல­மைப்பின் 20 ஆவது திருத்­தத்தைக் கொண்­டு­வ­ரு­வது குறித்தும் பேசு­கின்­றார்கள். ஜனா­தி­ப­திக்­கு­ரிய அதி­கா­ரங்­களை அர­சி­ய­ல­மைப்பின் 18 ஆவது திருத்­தத்தின் மூலம் மஹிந்த ராஜ­பக்ஷ வெகு­வாக அதி­க­ரித்­தி­ருந்தார். எனினும் நல்­லாட்சி அர­சாங்கம் அர­சி­ய­ல­மைப்பின் 19 ஆவது திருத்தம் மூலம் ஜனா­தி­ப­தியின் கட்­டற்ற அதி­கா­ரங்­களைக் குறைத்­த­துடன், சுயா­தீன ஆணைக்­கு­ழுக்­களை உரு­வாக்­கி­யது. தகவல் அறியும் உரி­மைச்­சட்­டத்தை அறி­முகம் செய்­தது. மேலும் ஜன­நா­ய­கத்தை வலுப்­ப­டுத்­து­வ­தற்­கான செயற்­திட்­டங்­களை மேற்­கொண்­டது.

இவை­ய­னைத்­தையும் எமக்குப் பெரும்­பான்மை இல்­லாத போதிலும் 100 நாட்­க­ளுக்­குள்­ளாக மேற்­கொண்டோம். ஆனால் இந்த அர­சாங்கம் பத­வி­யேற்று சுமார் 7 வாரங்கள் கடந்­துள்ள நிலை­யிலும் அரச ஊழியர் ஊதி­யக்­கொ­டுப்­ப­னவு அதி­க­ரிப்பு, மாபொல புல­மைப்­ப­ரிசில் கொடுப்­ப­னவு வழங்கல், பொருட்­களின் விலைக்­கு­றைப்பு உள்­ள­டங்­க­லாக தேர்­தலின் போது வழங்­கிய வாக்­கு­று­திகள் எத­னையும் நிறை­வேற்­ற­வில்லை. பெறு­ம­திசேர் வரிக்­கு­றைப்பின் கார­ண­மாக அர­சாங்கம் 500 பில்­லியன் ரூபா வரு­மா­னத்தை இழந்­தி­ருக்­கி­றது. அதனை எவ்­வாறு ஈடு­செய்­யப்­போ­கி­றது? இவற்றில் அக்­கறை காண்­பிப்­பதை விடுத்து, அர­சியல் பழி­வாங்­கல்­க­ளி­லேயே அர­சாங்கம் கவனம் செலுத்­திக்­கொண்­டி­ருக்­கி­றது.

எனவே முக்கிய விடயங்களை விட்டுவிட்டு, சிறிய விடயங்கள் மூலம் மக்களின் கவனத்தைத் திசைதிருப்பி அதனூடாகப் பெர்துத்தேர்தலில் வாக்குகளைப் பெற்றுக்கொள்வதற்கு அரசாங்கம் முயற்சிக்கக்கூடாது. மக்கள் அவற்றை நம்பி ஏமாற்றமடையும் நிலை தற்போது மாறிவிட்டது. ஆகவே இத்தகைய பொய் வாக்குறுதிகளை வழங்கும் தரப்பைத் தோற்கடித்து எதிர்வரும் பொதுத்தேர்தலில் 113 ஆசனங்களையும் விட அதிக ஆசனங்களைப் பெற்று சஜித் பிரேமதாஸவை பிரதமராக்குவதே எமது எதிர்பார்ப்பாகும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47