நியுசிலாந்திற்கு இங்கிலாந்து அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த வேளை மைதானத்தில் வேகப்பந்து வீச்சாளர் ஜொவ்ரா ஆர்ச்சரை இனரீதியில் கேலி செய்த ரசிகருக்கு மைதானத்திற்குள் நுழைவதற்கு நியுசிலாந்து அதிகாரிகள் இரண்டு வருட தடையை விதித்துள்ளனர்.

காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணைகளின் போது இங்கிலாந்திற்கு எதிரான முதலாவது டெஸ்டில் ஆர்ச்சரை  இனரீதியில் நிந்தனை செய்ததை குறிப்பிட்ட ரசிகர் ஏற்றுக்கொண்டுள்ளார்.

நியுசிலாந்திற்கு எதிரான முதல்டெஸ்டில் இங்கிலாந்து அணி தோல்வியடைந்ததை தொடர்ந்து ஆர்ச்சர் மைதானத்திலிருந்து வெளியேறிக்கொண்டிருந்தவேளை குறிப்பிட்ட நபர் ஆச்சரை கேலி செய்திருந்தார்.

குறிப்பிட்ட நபரை  தொடர்புகொண்டு 2022 வரை சர்வதேச உள்ளுர் போட்டிகளை பார்ப்பதற்காக மைதானத்திற்குள் நுழைவதற்கு அவருக்கு தடை விதிக்க்பபட்டுள்ளதை அறிவித்துள்ளதாக நியுசிலாந்து கிரிக்கெட் அறிவித்துள்ளது.

குறிப்பிட்ட நபர் தடையை மீறினால் காவல்துறை  நடவடிக்கைகளை எடுக்கவேண்டியிருக்கும் என நியுசிலாந்து கிரிக்கெட் தெரிவித்துள்ளது.

அந்த விரும்பத்தகாத சம்பவத்திற்காக நாங்கள் மீண்டும்ஜொவ்ரா ஆர்ச்சரிடமும்  இங்கிலாந்து  கிரிக்கெட் அணியின்முகாமையாளர்களிடமும்  மன்னிப்பு கோருகின்றோம் எனவும் நியுசிலாந்து கிரிக்கெட் தெரிவித்துள்ளது.

இவ்வாறான நடத்தை  ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாததுஎன்பதை மீண்டும் வலியுறுத்துகின்றோம் என நியுசிலாந்து கிரிக்கெட்டின் பேச்சாளர் அன்டனி கிரம்மி தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட  நபர் யார் என்பதை நாங்கள் பகிரங்கப்படுத்தப்போவதில்லை என  அவர் குறிப்பிட்டுள்ளார்.