இந்­திய தென்­னா­பி­ரிக்க அணி­க­ளுக்­கி­டை­யி­லான கடைசி டெஸ்ட் போட்­டியின் முதல் இன்­னிங்ஸில் 121 ஓட்­டங்­க­ளுக்கு சகல விக்­கெட்­டுக்­க­ளையும் இழந்­தது தென்­னா­பி­ரிக்க அணி.

டெல்லி பெரோசா கொட்­லாவில் நடை­பெற்­று­வரும் இந்­தப்­போட்­டியில் நாணய சுழற்­சியில் வெற்­றி­பெற்ற இந்­திய அணி முதலில் துடுப்­பெ­டுத்­தா­டி­யது. அதன்­படி முதல் இன்­னிங்ஸில் இந்­திய அணி 334 ஓட்­டங்க­ளுக்கு சகல விக்­கெட்­டுக்­க­ளையும் இழந்­தது.

இந்­திய அணி சார்பில் ரஹானே சிறப்­பாக துடுப்­பெ­டுத்­தாடி 127 ஓட்­டங்­களைப் பெற்றுக்கொண்டார்.

அதன்­பி­றகு தனது முதல் இன்­னிங்ஸை ஆரம்­பித்த தென்­னா­பி­ரிக்க அணி நேற்­றைய ஆட்ட நேர முடி­வின்­போது 121 ஓட்­டங்­க­ளுக்கு சகல விக்­கெட்­டுக்­க­ளையும் பறி­கொ­டுத்­தது. இதில் டிவி­லியர்ஸ் 42 ஓட்­டங்­களைப் பெற்­றுக்­கொண்டார். ஏனைய வீரர்கள் அனை­வரும் சொற்ப ஓட்­டங்­க­ளுடன் ஆட்­ட­மி­ழந்­தனர்.

பந்­து­வீச்சில் இந்திய பந்துவீச்சாளரான ஜடேஜா 5 விக்கெட்டுக்களை வீழ்த்தி அசத்தினார். இன்று மூன்றாம் நாள் ஆட்டம்.