உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு, ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் இன்று காலை கட்டுநாயக்கா விமான நிலையத்தை வந்தடைந்தார். 

இந்நிலையில் வெளிவிவகார அமைச்சருடன் 42 பேர்  அடங்கிய குழுவுடன் குறித்த விஜயத்தை மேற்கொண்டுள்ளனர். 

அமைச்சர் சுசில் பிரேமஜயந்த , இலங்கை வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் மற்றும் இலங்கையில் உள்ள ரஷ்ய தூதரகத்தின் தூதுவர் உட்பட பலர் விமான நிலையத்திற்கு சென்று வரவேற்றமை குறிப்பிடத்தக்கது.