தென்னாபிரிக்கா அணியின் சுழற்பந்து வீச்சாளரும் சகலதுறை ஆட்டக்காரருமான ஜே.பி. டுமினி, அனைத்துவகையான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

தென்னாபிரிக்காவின் சுழற்பந்து வீச்சாளரும் சகலதுறை ஆட்டக்காரருமான ஜே.பி. டுமினி கடந்த 2017 ஆம் ஆண்டில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். 

அதன்பின் கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்குப்பின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

இந்நிலையில், 35 வயதாகும் டுமினி, இருபதுக்கு - 20  தொடரில் அதிக அளவில் விளையாடினார். இதையடுத்து அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.