(எம்.ஆர்.எம்.வஸீம்)

ரஞ்சன் ராமநாயக்கவின் பின்னணியில் பிரபலமான ஒருவர் இருக்கவேண்டும். ரணில் விக்கிரமசிங்கவே இருக்கின்றார் என்பது அவரது குரல் பதிவொன்றின் மூலம் உறுதியாகின்றது. அதனால் இதுதொடர்பாக ரணில் விக்ரமசிங்கவை விசாரிக்கவேண்டும். அதன் மூலம் பல விடயங்கள் வெளியில் வரலாம்  என இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.


ரஞ்ஜன் ராமநாயக்க நீதிபதிகள் மற்றும் பொலிஸாரை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர தனித்து செயற்பட்டிருக்கமாட்டார்.

அத்துடன் அவரின் குரல் பதிவுகளை பார்க்கும்போது ரணில் விக்ரமசிங்க இவரின் நடவடிக்கைக்கு பின்னால் இருப்பது உறுதியாகின்றது.

ரஞ்ஜன் ராமநாயக்கவின் குரல் பதிவுகள் தொடர்பாக ஐக்கிய தேசிய கட்சியில் பொறுப்புவாய்ந்த எவரும் இதுவரை எந்த பதிலையும் தெரிவிக்கவில்லை.

மேலும் அவர் இவ்வாறு செயற்படுவதற்கு பல்வேறு நோக்கங்கள் இருக்கலாம். ஆனால் அவரது குரல் பதிவுகளை கேட்கும்போது, நாட்டில் ஆட்சி மாற்றம் ஒன்று ஏற்பட்டாலும் தான் தொலைபேசியில் உரையாடிய அதிகாரிகளை அச்சுறுத்தி அவரின் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளும் நோக்கத்திலே இதனை செய்திருக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டுக்கு வரமுடியுமாகின்றது. அதனால் இந்த விடயத்தை சாதாரணமாக கருதமுடியாது.

அவரின் பின்னணியில் பிரபலமான ஒருவர் இருக்கவேண்டும். ரணில் விக்ரமசிங்கவே இருக்கின்றார் என்பது அவரது குரல் பதிவொன்றின் மூலம் உறுதியாகின்றது. அதனால் இதுதொடர்பாக ரணில் விக்ரமசிங்கவை விசாரிக்கவேண்டும். அதன் மூலம் பல விடயங்கள் வெளியில் வரலாம்.

சோசலிச மக்கள் முன்னணி இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.