(ஆர்.விதுஷா)
பதுளை - அசேலபுர பகுதியில் பெண்ணொருவர் கழுத்தில் வெட்டுக்காயங்களுடன் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்த சம்பவம் இன்று திங்கட்கிழமை காலை 6.30 மணியளவில் இடம்பெற்றதாக பதுளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
வெட்டுக்காயங்களுக்குள்ளான பெண் பதுளை வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த பெண்ணின் கணவர் பிள்ளையை பாடசாலைக்கு அழைத்து சென்றிருந்த தருணத்தில் அங்கு வந்த நபரொருவரே குறித்த பெண்ணை தாக்கியுள்ளதாக விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.
பாடசாலை சென்று காலை 8 மணியளவில் வீடு திரும்பிய போது தமது மனைவி கை, கால்கள் கட்டப்பட்டு, கழுத்தில் வெட்டுக்காயங்களுடன் இருப்பதை பார்த்த கணவர் உடனடியாக பதுளை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.
வீட்டு கட்டுமான பணிக்காக வருகை தந்திருந்த பதுளை , பதுலுசிறிகமை பகுதியை சேர்ந்த நபரொருவரே இந்த செயலை புரிந்துள்ளமை விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் இதுவரையில் கைதுசெய்யப்படாத நிலையில் பொலிசார் தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். அத்துடன், சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பதுளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM