(ஆர்.விதுஷா)

களுத்துறை - கட்டுக்குறுந்த பகுதியில் அமைந்துள்ள பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின்   இரண்டு மாடிக்கட்டடத்தொகுதியில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.  

இந்த  தீவிபத்து  இன்று திங்கட்கிழமை   காலை 8  மணியளவில்  இடம்பெற்றுள்ளதுடன், கட்டடத்தின்  இரண்டாம் மாடியிலேயே  திடீர்  தீப்பரவல்  ஏற்பட்டதாக  களுத்துறை பொலிஸ்  நிலையப் பொறுப்பதிகாரி  தெரிவித்தார்.

அந்தப் பகுதிக்கு  விரைந்த தீயணைப்பு  படையினர்   தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

தீவிபத்தின் காரணமாக  உயிரிழப்புக்கள்  எதுவும் சம்பவிக்காத நிலையில்  , சொத்துக்களுக்கு  சேதம்  ஏற்பட்டுள்ளது.

மின் கசிவின் காரணமாக  இந்த  தீவிபத்து இடம் பெற்றிருக்கலாம் என  சந்தேகிக்கும்  பொலிசார் விசாரணைகளை  மேற்கொண்டு வருகின்றனர் .