ரணில், கரு , சஜித் ஆகியோருக்கு ஐக்கிய தேசிய பிக்கு முன்னணியின் ஆலோசணை !

Published By: Digital Desk 8

13 Jan, 2020 | 04:14 PM
image

(எம்.மனோசித்ரா)

பிளவுப்பட்டு தனித்து செயற்படுவதால் எதனையும் சாதித்து விட முடியாது. மேலும் பின்னடைவுகளையே சந்திக்க நேரிடும். ஆகவே எதிரே காணப்பட கூடிய சவால்களை கவனத்தில் கொண்டு கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க , சபாநாயகர் கரு ஜயசூரிய மற்றும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என ஐக்கிய தேசிய பிக்கு முன்னணியின் பொதுச் செயலாளர் நீனியாவல பாலித தேரர் குறிப்பிட்டார்.

இது குறித்து அவர் தொடர்ந்தும் கூறுகையில் ,

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க , சபாநாயகர் கரு ஜயசூரிய மற்றும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் ஆகியோர் ஒன்றிணைந்து பொதுத்தேர்தலை எதிர்க்கொள்ள வேண்டும். இதனூடாகவே சிறுபான்மை , நடுத்தர வர்க்க , பௌத்த மற்றும் கிராமிய மக்களின் அதரவுகளை பெற்றுக்கொள்ள முடியும்.

ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்த நிலையில் மற்றுமொரு தேசிய தேர்தலை எதிர்கொள்கின்ற போது யாரையும் அநாவசியமானவர்கள் எனக் கருத கூடாது.  இது வெற்றியை பாதிப்பது மாத்திரமன்றி அவ்வாறு ஓரங்கட்டுவதற்கு யாருக்கும் உரிமையும் கிடையாது.

அவ்வாறு ஒன்றிணைந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய யோசனையினை மூவருக்கும் எழுத்து மூலமாகவும் இன்று செவ்வாய்க்கிழமை வழங்க உள்ளோம்.

ஜனாதிபதி தேர்தல் முடிவுகளின் பிரகாரம் ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிராக கிடைக்க கூடிய ஆசனங்களை கவனத்தில் கொண்டு தலைவர்கள் செயற்பட வேண்டும்.

தனித்து செயற்படுவதால் எதனையும் சாதித்து விட முடியாது. மேலும் பின்னடைவுகளையே சந்திக்க நேரிடும் என நீனியாவல பாலித தேரர் மேலும் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிரான வழக்கு மீதான...

2026-02-12 16:48:09
news-image

தீகல சமனுக்குச் சொந்தமான 2 கோடி...

2026-02-12 15:55:20
news-image

பலதரப்பு கடற்படைப் பயிற்சிகளில் பங்கேற்க இலங்கை...

2026-02-12 17:12:34
news-image

நாடளாவிய ரீதியில் பொலிஸார் விசேட சுற்றிவளைப்பு:...

2026-02-12 17:00:17
news-image

மொரட்டுவையில் விசேட சுற்றிவளைப்பு ; 13...

2026-02-12 16:45:30
news-image

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் பெயரில் பரவும் போலி...

2026-02-12 16:19:17
news-image

கடும் மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை

2026-02-12 16:15:31
news-image

சடலத்தை அடையாளம் காண பொதுமக்களிடம் உதவி...

2026-02-12 16:02:17
news-image

பிள்ளைகளுக்கு தரமான கல்வியை வழங்குவதே அரசாங்கத்தின்...

2026-02-12 15:49:13
news-image

"முழு நாடுமே ஒன்றாக" தேசிய திட்டம்:...

2026-02-12 15:33:00
news-image

அதிகரித்துள்ள கசிப்பு உற்பத்தியை விரைந்து கட்டுப்படுத்த...

2026-02-12 15:20:15
news-image

இந்திய மீனவர்கள் தொடர்பாக தெளிவுபடுத்தினாலும் அரசாங்கம்...

2026-02-12 15:12:32