பகிடிவதைகள் தொடர்பில் இணையத்தளத்தில் முறையிடுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக உயர் கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டின் முடிவில் இதனை அறிமுகப்படுத்த எதிர்பார்த்துள்ளதாகவும் மாணவர்கள் தனது பிரச்சினைகளை துரிதமாக தெரியப்படுத்துவதற்கான சந்தர்பமாக இது அமையும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். 

கடந்த காலங்களில் பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பகிடிவதைகளினால் பல மாணவர்கள் பிரச்சினைகளை எதிர்கொண்டனர். அவ்வாறான பிரச்சினைகள் எதிர்வரும் காலங்களில் நடைபெறாமல் தடுப்பதே இதன் நோக்கமாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.