சிவில் விமான சேவைகள் பணிப்­பாளர் சபைக்கு நாமல், ரோஹிதவின் உற­வி­னர்கள் நிய­மனம்

13 Jan, 2020 | 03:07 PM
image

(இரா­ஜ­துரை ஹஷான்)

 சிவில் விமான சேவைகள்  பணிப்­பாளர் சபைக்கு  பிர­தமர் மஹிந்த ராஜ­ப­க் ஷவின் குடும்ப உறுப்­பி­னர்கள் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளார்கள். ஆனால் ஜனா­தி­பதி கோத்­த­பாய ராஜ­பக் ஷ  குடும்ப   உறுப்­பி­னர்­களை ஒரு­போதும்   உயர்­ப­த­வி­க­ளுக்கு நிய­மிக்­க­மாட்டேன் என்று குறிப்­பிட்டார்.   அர­சாங்­கத்தின்  உண்மைத்தன்மை வெளிப்­பட ஆரம்­பித்து விட்­டது  என ஐக்­கிய தேசிய கட்­சியின் பாராளுமன்ற உறுப்பினர்   முஜிபுர் ரஹ்மான் எம்.பி. தெரி­வித்தார்.

 ஐக்­கிய தேசிய கட்­சியின் தலைமை காரி­யா­ல­யத்தில் நேற்று   ஞாயிற்­றுக்­கி­ழமை இடம்பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு கருத்­து­ரைக்­கை­யிலேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.   அவர்  மேலும் குறிப்­பி­டு­கையில்,

நல்­லாட்சி அர­சாங்­கத்தின் மீது பல நிரூ­பிக்­கப்­ப­டாத குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைத்தே பொது­ஜன பெர­முன தேர்தல் பிர­சா­ரங்­களை முன்­னெ­டுத்­தது. தேர்தல் காலத்தில் பல்­வேறு வாக்­கு­று­திகள்    வழங்­கப்­பட்­டன.  அரச ஊழி­யர்­க­ளுக்கு சாத­க­மான நிைலமை தோற்றம் பெறும் என்று  குறிப்­பி­டப்­பட்­டது. ஆனால் இன்று   அரச ஊழி­யர்­களே    பாரிய நெருக்­க­டி­க­ளுக்கு முகம் கொடுத்­துள்­ளார்கள்.

அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்தை  கடந்த அர­சாங்கம்    சீன  நிறு­வ­னத்­திற்கு தாரை  வார்த்­த­தாக தொடர்ந்து குற்­றஞ்­சாட்­டப்­பட்­டது. ஆனால்  அர­சாங்கம் ஆட்­சிக்கு வந்து 2 மாத காலத்­துக்குள் எவ்­வித விலை­ம­னு­கோ­ர­லு­மின்றி  கொழும்பு சங்­ரில்லா ஹோட்­ட­லுக்கு அரு­கா­மையில் உள்ள  3 ஏக்கர்  அரச காணி  சிங்­கப்பூர் நிறு­வ­னத்­துக்கு 99வருட கால ஒப்­பந்­தத்­திற்கு  வழங்­கப்­பட்­டுள்­ளது. இவ்­வி­டயம் நாட்டு மக்­களின் கவ­னத்தில் இருந்து முழு­மை­யாக மறைக்­கப்­பட்­டுள்­ளது.

தேர்தல் காலத்தில் அர­சாங்கம் வழங்­கிய   வாக்­கு­று­தி­களை முழு­மை­யக மறைக்­கவும், மக்­களின் கவ­னத்தை திசை­தி­ருப்­பவும்  பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ரஞ்சன் ராம­நா­யக்­கவின்   தொலை­பேசி குரல் பதி­வுகள்  பர­வ­லாக  அர­சியல் களத்தில் பேசப்­ப­டு­கின்­றன.  இவ்­வி­ட­யத்­துக்கு மாத்­திரம் முக்­கி­யத்­துவம் கொடுப்­பதை காட்­டிலும்  மக்­களின்  அடிப்­படை பிரச்­சி­னை­க­ளுக்கு  அர­சாங்கம் தீர்வு  வழங்க வேண்டும்.

அரச அதி­கா­ரத்தை பிர­யோ­கித்து   குடும்ப  உறுப்­பி­னர்­க­ளுக்கு  பத­விகள் வழங்­கப்­பட மாட்­டாது என்று ஜனா­தி­பதி கோத்­த­பாய ராஜ­பக் ஷ குறிப்­பிட்டார். ஆனால் இர­க­சி­ய­மான முறையில்  பாரா­ளு­மன்ற உறுப்­பினர்  நாமல் ராஜபக் ஷவின்  உற­வினர் மற்றும் ரோஹித்தவின் உற­வினர் ஆகியோர் சிவில்  விமான சேவைகள்  சபையின் பணிப்­பா­ளர்­க­ளாக நிய­மிக்­கப்­பட்­டுள்­ளார்கள். 2015ஆம் ஆண்­டுக்கு முன்­ன­ரான அர­சாங்­கத்தின்  சுய ரூபம் தற்­போது தோற்றம் பெற ஆரம்­பித்து விட்­டது.

தேசிய  நல்லிணக்கத்தை ஊக்குவிக்க   அரசாங்கம் எவ்வித நடவடிக்கைகளையும் இனி மேற்கொள்ளாது. கடந்த அரசாங்கம் முன்னெடுத்த திட்டங்களும்  இனி இல்லாதொழிக்கப்படும். இன  நல்லிணக்கம் குறித்து ஜனாதிபதி கோத்தபாய ராஜபக் ஷ  தனது அக்கிராசன உரையில் குறிப்பிடவில்லை என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுப் போக்குவரத்தை வலுப்படுத்தாமல் பொருளாதார முன்னேற்றம்...

2026-07-18 05:41:32
news-image

எரிபொருள் விநியோக பாதுகாப்பை உறுதிப்படுத்த கோட்டா...

2026-07-18 05:33:11
news-image

ஈ.பி.எப்., ஈ.ரீ.எப். இணைப்புக்கு எதிர்ப்பு; தொழிற்சங்கங்கள்...

2026-07-17 14:34:16
news-image

நீர்கொழும்பு சிறைச்சாலை மரணங்கள் : வழக்கு...

2026-07-17 16:18:43
news-image

புகைப்பிடிப்பதால் தினமும் 50 உயிரிழப்புகள்; ஆண்டுக்கு...

2026-07-17 16:19:13
news-image

எரிபொருள் விலையில் பாரியதொரு மாற்றம் ஏற்படாது...

2026-07-17 16:19:41
news-image

போதைப்பொருளுக்கு எதிராக கடுமையான சட்டங்கள் இயற்றப்படும்...

2026-07-17 16:20:09
news-image

மண்ணெண்ணெயில் இயங்கிய 100 பஸ்கள் அடையாளம்;...

2026-07-17 22:26:04
news-image

அதிசிறப்புத் தரத்துக்குத் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான பதவியுயர்வு...

2026-07-17 22:20:42
news-image

ஜனாதிபதி மற்றும் சிறைச்சாலைத் திணைக்கள அதிகாரிகளுக்கு...

2026-07-17 22:08:58
news-image

தொழிற்கல்வியை வலுப்படுத்த 2027 வரவுசெலவுத் திட்டத்தில்...

2026-07-17 22:06:56
news-image

நேர்மையாக இருந்தால் நிச்சயம் விமர்சனங்கள் வரும்...

2026-07-17 21:48:04