(ரொபட் அன்­டனி)

ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சிக்கும்  ஸ்ரீ­லங்கா பொது­ஜன பெர­மு­ன­வுக்கும் இடையில் சிறந்த உறவு காணப்­ப­டு­கின்­றது.   சிறந்த வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுக்கும் ஜனா­தி­பதி கோத்­தாப­யவை நாங்கள்  தொடர்ந்து பலப்­ப­டுத்­துவோம் என்று சுதந்­திரக் கட்­சியின் பொதுச் செயலர் தயா­சிறி ஜய­சே­கர தெரி­வித்தார்.

எதிர்­வரும் பாரா­ளு­மன்றத்  தேர்­தலில் சுதந்­திரக் கட்­சியின்  தலைவர்  முன்னாள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பொலன்­ன­றுவை மாவட்­டத்தில் போட்­டி­யி­டுவார் என்றும் அவர் குறிப்­பிட்டார்.

தற்­போ­தைய அர­சியல் நிலை­மைகள் எதிர்­வரும் பாரா­ளு­மன்ற  தேர்­தலில் போட்­டி­யிடும் விதம் என்­பன குறித்து விப­ரிக்­கை­யி­லேயே  அவர்  மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.  

அவர்  இது  தொடர்பில் மேலும் குறிப்­பி­டு­கையில்,

புதிய அர­சாங்­கத்தில்  ஜனா­தி­பதி  கோத்­த­பாய ராஜ­பக் ஷ சிறந்த வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுத்­து­வ­ரு­கின்றார். அவரின் வேலைத்­திட்­டங்­க­ளுக்கு நாங்கள் ஆத­ர­வ­ளிக்­கின்றோம்.   தொடர்ந்து ஜனா­தி­ப­தியை பலப்­ப­டுத்த  சுதந்­திரக் கட்சி  அர்ப்­ப­ணிப்­புடன் செயற்­படும்.

கேள்வி: எதிர்­வரும் பாரா­ளு­மன்ற தேர்­தலில் எவ்­வாறு போட்­டி­யி­டு­கின்­றீர்கள்?

பதில்:  எதிர்­வரும் பாரா­ளு­மன்ற தேர்­தலில்  போட்­டி­யி­டு­வ­தற்கும் தேர்­தலை எதிர்­கொள்­ளவும்  சுதந்­திரக் கட்சி தயா­ரா­கி­வ­ரு­கின்­றது.  தேர்­தலை  சிறந்த முறையில் எதிர்­கொள்ள நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்து வரு­கின்றோம்.  தனித்து போட்­டி­யி­டு­வதா அல்­லது கூட்­ட­ணி­ய­மைத்து போட்­டி­யி­டு­வதா என்­பது   தொடர்பில் இன்னும் தீர்­மா­ன­மில்லை.   ஆனால் பெரும்­பாலும்  பொது­ஜன பெர­மு­ன­வுடன் இணைந்து போட்­டி­யி­டு­வ­தற்­கான  வாய்ப்பே அதிகம் காணப்­ப­டு­கின்­றது.  அதற்­கான  சூழலே நில­வு­கின்­றது.

இந்த விட­யத்தில் சுதந்­திரக் கட்­சியின்  அனைத்து பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் ஏகோ­பித்த நிலைப்­பாட்டில் உள்­ளனர்.  

கேள்வி:  ஸ்ரீ­லங்கா சுதந்­திரக் கட்­சிக்கும்  சிறி­லங்கா பொது­ஜன பெர­மு­ன­வுக்கும் இடை­யி­லான உறவு எவ்­வாறு உள்­ளது?

பதில்: இரண்டு கட்­சி­க­ளுக்கும் இடையில் சிறந்த உறவு காணப்­ப­டு­கின்­றது. நாங்கள்  நல்­ல­வி­த­மான தொடர்பில் இருக்­கின்றோம். அதில் எந்த சிக்­கலும் இல்லை.   சிறந்த வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுக்கும் ஜனா­தி­ப­தியை   நாங்கள்  தொடர்ந்து பலப்­ப­டுத்­துவோம்.

கேள்வி: சுதந்­திரக் கட்­சியின்  தலைவர் மைத்­தி­ரி­பால சிறி­சேன பொதுத் தேர்­தலில் போட்­டி­யி­டு­வாரா?

பதில்: பாரா­ளு­மன்றத்  தேர்­தலில் சுதந்­திரக் கட்­சியின்  தலைவர்  முன்னாள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பொலன்னறுவை மாவட்டத்தில் போட்டியிடுவார். அவர் பாராளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற பின்னர் என்ன செய்யப்போகின்றார் என்பதை பின்னரே பார்க்கவேண்டும். அவரிடம் அதற்கு திட்டங்கள் இருக்கலாம். ஆனால்  அரசியலிலிருந்து ஓய்வுபெற மாட்டார்.  நிச்சயம் தேர்தலில் போட்டியிடுவார்.