எதிர்ப்புத் தெரிவிக்கும் மிஸ்­பா உல் ஹக்

13 Jan, 2020 | 02:36 PM
image

ஐந்து நாட்கள் நடை­பெறும் டெஸ்ட் போட்­டியை 4 நாட்­க­ளாக குறைப்­ப­த­றற்கான  சர்­வ­தேச கிரிக்கெட் கவுன்­சிலின் (ஐ.சி.சி.) திட்­டத்­துக்கு பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலை­வரும், தற்­போ­தைய தேர்­வுக்­குழு தலை­வ­ரு­மான மிஸ்­பா-­உல்-­ஹக்கும் எதிர்ப்பு தெரி­வித்­துள்ளார்.

இது தொடர்பில் மிஸ்­பா-­உல்-ஹக் தெரி­வித்­துள்­ள­தா­வது:-

டெஸ்ட் போட்­டியில் தற்­போது வேகப்­பந்து வீரர்கள் ஒரு இன்­னிங்ஸூக்கு சுழற்சி முறையில் 17 முதல் 18 ஓவர்கள் வரை வீசு­கி­றார்கள். 4 நாட்­க­ளாக குறைக்­கும்­போது 20 முதல் 25 ஓவர்கள் வரை வீச வேண்­டிய நிலை­வரும். கூடு­த­லான ஓவர்­களை வீசு­வதால் பந்து வீச்­சா­ளர்­க­ளுக்கு காயம் ஏற்­படும் அபாயம் உள்­ளது.

ஸ்டார்க், கம்மின்ஸ், நசீம் ஷா, ஜஸ்­பிரித் பும்ரா போன்ற வேகப்­பந்து வீரர்கள் அதி­க­மான ஓவர்­களை வீச­ வேண்­டிய நிலை ஏற்­படும். இதனால் அவர்­க­ளது வேகப்­பந்து வீச்­சுத்­திறன் பாதிக்­கப்­படும் எனவும் அவர் குறிப்­பிட்­டுள்ளார்.  

4 நாள் டெஸ்ட் போட்­டிக்கு அவுஸ்­தி­ரே­லியா, இங்­கி­லாந்து கிரிக்கெட் கட்­டுப்­பாட்டு சபைகள்  வர­வேற்பு தெரி­வித்­த­ அ­தே­வேளை இதை கவ­ன­முடன் கையா­ளு­மாறும் வேண்­டுகோள் விடுத்­தன. இந்­திய கிரிக்கெட் கட்­டுப்­பாட்டுத் தலைவர் கங்­குலி இது ­கு­றித்து எந்த முடிவும் தெரி­விக்­க­வில்லை.

இருந்த போதும் கிரிக்­கெட்டின் சகாப்தம் என்று வர்­ணிக்­கப்­படும்  சச்சின் டெண்­டுல்கர், இந்­திய அணி கேப்டன் விராட் கோஹ்லி, அவுஸ்­தி­ரே­லிய முன்னாள் கேப்­டன்கள் ரிக்கி பொண்டிங், ஸ்டீவ் வாக், அவுஸ்­தி­ரே­லிய சுழற்­பந்து வீரர் நதன் லயன், பயிற்­சி­யாளர் லாங்கர் உள்­ளிட்ட பலர் டெஸ்ட் போட்டியை 4 நாட்களாக குறைக்கும் ஐ.சி.சி. யின் திட்டத்துக்கு ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35