(செ.தேன்­மொழி)

பௌர்­ணமி தினத்­தன்று புல­னாய்வு அதி­கா­ரிகள் சில­ருக்கு பொது­மன்­னிப்பு வழங்கி விடு­தலை செய்­தமை தொடர்பில் ஜனா­தி­பதி கோத்தபாய ராஜ­ப­க் ஷ­வுக்கு நன்றி தெரி­வித்த ஐக்­கிய தேசியக் கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அஜித் பி பெரேரா நாட்டின் சிறந்த தலைவர் ஒருவர் இவ்­வாறு தான் செயற்­பட வேண்டும் என்றும் கூறி னார்.

எதிர்க்­கட்சித் தலைவர் அலு­வ­ல­கத்­தில் நேற்று ஞாயிற்­றுக்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­கச் ­சந்­திப்பில் இதனைத் தெரி­வித்த அவர் மேலும் கூறி­ய­தா­வது,

ஜனா­தி­பதி தேர்தல் பிர­சா­ரங்­களின் போது கோத்தபாய தாம் ஆட்சிக்கு வந்தால் சிறை­வைக்­கப்­பட்­டுள்ள இரா­ணுவ புல­னாய்வு அதி­கா­ரிகள் அனை­வ­ரையும் விடு­தலை செய்­வ­தாகத் தெரி­வித்­தி­ருந்தார். இதனால் பலரும் அவ­ருக்கு ஆத­ர­வாக வாக்­க­ளித்­தி­ருந்­தனர். இவ்­வாறு சிறை­வைக்­கப்­பட்­டுள்ள புல­னாய்வு பிரி­வி­ன­ருக்கு பிணை வழங்­கு­வது தொடர்பில் சிறிது கால­தா­மதம் ஏற்­பட்­ட­தினால் அர­சாங்­கத்­திற்கு ஆத­ர­வாக வாக்­க­ளித்த மற்றும் வாக்­க­ளிக்­காத அனை­வ­வரும் கவ­லை­ய­டைந்­தி­ருந்­தனர்.

இந்­நி­லையில் மரண தண்­டனை விதிக்­கப்­பட்­டி­ருந்த சார்ஜென்ட் சுனில் ரத்­நா­யக்­க­வுக்­கா­வது பிணை வழங்­கப்­பட வேண்டும் என்று பலரும் எதிர்­பார்த்­தி­ருந்­தனர். இதற்­க­மைய கடந்த பௌர்­ணமி தினம் சுனில் ரத்­நா­யக்க உள்­ளிட்ட 34 புல­னாய்வு பிரி­வி­ன­ருக்கு ஜனா­தி­ப­தியின்  பொது மன்­னிப்பின் அடிப்­ப­டையில் , எந்­த­வித பரிந்­து­ரையும் இன்றி அர­சாங்கம் விடு­தலை செய்­துள்­ள­தாக தெரி­ய­வந்­துள்­ளது.

சொல்­வதை செய்யும் தலைவர் என்றால் இவ்­வா­றுதான் செயற்­பட வேண்டும். இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்தி செயற்பட்டதற்காக ஜனாதிபதிக்கும் , நீதி அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவுக்கும் நாங்கள் நன்றித் தெரிவித்துக் கொள்கின்றோம்.