அவிசாவளை கொஸ்கம சாலாவ இராணுவ முகாமை சூழவுள்ள அனைத்து பகுதிகளுக்கும் நாளை முதல் முழுமையாக மின்சாரம் வழங்கப்பட்டுள்ளதாக மின்சார சபை தெரிவித்தது.

முகாமில் ஏற்பட்ட தீயினால் 15  மின்மாற்றிகளினால் விநியோகிக்கப்படும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. அவற்றில் 10 மின்மாற்றிகளின் மூலம் நேற்றைய தினம் மின்சாரம் விநியோகிக்கப்பட்டுள்ளது. 

எனவே, நாளை தினம் மின்சாரம் தடைப்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் முழுமையாக மின்சாரத்தை வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக, மின்சக்தி அமைச்சர் ரஞ்ஜித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.