நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது இந்­திய அணி

Published By: J.G.Stephan

13 Jan, 2020 | 11:54 AM
image

இந்­திய கிரிக்கெட் அணி எதிர்­வரும் 24ஆம் திகதி நியூ­ஸி­லாந்­திற்கு சுற்­றுப்­ப­யணம் மேற்­கொள்­ள­வுள்­ள­துடன்  20 ஓவர் கொண்ட ஐந்து போட்­டி­க­ளிலும், மூன்று ஒருநாள் போட்­டி­க­ளிலும் இரண்டு டெஸ்ட் போட்­டி­க­ளிலும் விளை­யா­ட­வுள்­ளது. 

இந்த தொட­ருக்­கான இந்­திய அணியின் விபரம் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. வழக்­க­மான 15 வீரர்கள் பட்­டி­ய­லுக்கு பதி­லாக 16 அல்­லது 17 வீரர்கள் தேர்வு செய்­யப்­ப­டு­வார்கள் என்று தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

20 ஓவர் அணியைப் பொறுத்­த­வரை உலக கோப்பை போட்­டிக்கு தயா­ராகும் வகையில் முன்­னு­ரிமை அளிக்­கப்­ப­டும்­ எ­னவும் எனவும் குறிப்­பி­டப்­ப­டு­கி­றது.

முதுகில் ஏற்­பட்ட காயம் கார­ண­மாக சத்­தி­ர­சி­கிச்சை செய்­து­கொண்ட சக­ல­துறை ஆட்­டக்­காரர் ஹர்திக் பாண்ட்யா கடந்த 4 மாதங்­க­ளாக எந்­த­வொரு சர்­வ­தேச போட்­டி­யிலும் விளை­யா­ட­வில்லை. இந்­நி­லை­யில் அவர் நியூ­ஸி­லாந்து தொடரின் மூலம் மீண்டும் இந்­திய அணிக்கு திரும்­புவார் என்று எதிர்­பார்க்­கப்­பட்­டது.

ஏற்­க­னவே இந்­திய ஏ அணிக்கு தேர்­வாகியிருந்த ஹர்திக் பாண்ட்­யாவின்  உடல்­த­குதி சோதனை நேற்று முன்­தினம் நடந்­தது. அதில் அவர் முழு உடல்­த­குதி பெற­வில்லையென  தெரி­விக்­கப்­பட்­டதால் இந்­திய ஏ அணியிலிருந்து விலக்­கப்­பட்டார். 

எனவே அவ­ரது வருகை மீண்டும் தாம­த­மா­கி­யுள்­ளது. கடந்த  ஜூலை மாதத்­திற்கு பிறகு எந்த சர்­வ­தேச போட்­டி­யிலும் விளை­யா­டாமல் ஒதுங்கி இருக்கும் டோனி இந்தத் தொட­ரிலும் சேர்க்­கப்­பட வாய்ப்­பில்லை என்று சொல்­லப்­ப­டு­கி­றது. 

எதிர்­பார்க்­கப்­பட்ட அள­வுக்கு பார்மில் இல்­லாத 34 வய­தான சக­ல­துறை ஆட்­டக்­காரர் கேதர் ஜாதவ் நீக்­கப்­பட்டு அவ­ருக்கு பதி­லாக சூர்­ய­குமார் யாதவ் அல்­லது ரஹானே ஆகி­யோரின் பெயர் ஒருநாள் போட்டி அணிக்கு பரி­சீ­லிக்­கப்­ப­ட­லாம்­ எ­னவும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

டெஸ்ட் அணியை பொறுத்­த­வரை 3ஆவது தொடக்க ஆட்­டக்­காரர் இடம் மட்­டுமே காலி­யாக உள்­ளது. பிரித்வி ஷா காயத்தால் அவ­திப்­ப­டு­வதால் லோகேஷ் ராகுல், சுப்மான் கில் ஆகி­யோரில் ஒரு­வ­ருக்கு அதிர்ஷ்டம் அடிக்கும். 5 ஆவது வேகப்­பந்து வீச்­சாளர் நப்தீப் சைனிக்கு பதில் 3ஆவது சுழற்­பந்து வீச்­சாளர் தேவை என்று தேர்­வா­ளர்கள் கரு­தினால், குல்தீப் யாதவ் இடம்பிடிப்பார். மற்றப்படி வேகப்பந்து வீச்சாளர்கள் ஜஸ்பிரித் பும்ரா, உமேஷ் யாதவ், முகமது ஷமி, இஷாந்த் ஷர்மா உள்ளிட்டோர் வழக்கம் போல் இடம்பெறுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58
news-image

பூட்டானை வீழ்த்தியது இலங்கை : கால்பந்தாட்டத்திலிருந்து...

2024-03-26 16:48:31