கிளிநொச்சி, பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட இயக்கச்சி பகுதியில் வைத்து பெண்ணொருவரை பொலிஸார் கஞ்சாவுடன் கைதுசெய்துள்ளனர்.

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட இயக்கச்சி பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக பெண் ஒருவர் நடமாடுவதாக பளை பொலிசார் மற்றும் விசேட அதிரடிப்படையினருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இந்நிலையில் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய சம்பவ இடத்திற்கு விரைத்த பொலிசார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் குறித்த பெண்னை பரிசோதித்த போது 2 கிலோ 100 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

இதையடுத்து குறித்த பெண் பளை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டு மேலதிக விசாரணைகளை பளை பொலிசார் மேற்கொண்டு வருவதுடன்  முதற்கட்ட விசாரணையில் குறித்த பெண் கிளிநொச்சியை சேந்தவர் என பளை பொலிசார் தெரிவித்தனர்.