வவுனியா நகரசபையின் ஏற்பாட்டில் சைவசமயத்திற்கு அரும்பணியாற்றிய சுவாமிவிவேகாநந்தரின் 157ஆவது பிறந்ததினநிகழ்வு  வவுனியா புகையிரத நிலைய வீதியில் அமைந்துள்ள அவரது உருவ சிலைக்கு முன்பாக இன்று காலை நடைபெற்றது. 

வவுனியா நகரசபையின் உபநகரபிதா சு.குமாரசாமி தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் அடிகளாரின் சிலைக்கு மாலை அணிவிக்கபட்டு மலரஞ்சலி நிகழ்தப்பட்டதுடன் தமிழ்மணி அகளங்கன் விவேகானந்தர் தொடர்பான நினைவுரையினை ஆற்றியிருந்தார். 

நிகழ்வில் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன்,   நகரபை உறுப்பினர்களான நா.சேனாதிராஜா, ரி.கே.ராஜலிங்கம், சுமந்திரன், சமூகசேவைகள் உத்தியோகத்தர் ஶ்ரீனிவாசன், பிரதேசசபை உறுப்பினர் சுப்பிரமணியம், சமூக ஆர்வலர்கள், வர்த்தக பிரமுகர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது வறுமைநிலையிலுள்ள பத்து குடும்பங்களிற்கு தமிழ்விருட்சம் சமூக ஆர்வலர் அமைப்பின் ஏற்பாட்டில் பொங்கல் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.