* அநேகமான பெண்கள் தமது கணவன்மாரை இழந்துள்ளனர் அல்லது இருக்குமிடம் தெரியாதிருக்கின்றனர். சிலர் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இத்தகைய மனவேதனைகள் இருக்கத்தக்கதாக மேற்படி குடும்பங்களின் சிறுவர்களையும் முதியவர்களையும் பராமரிக்க வேண்டியது இப்பெண்களின் பொறுப்பாகவுள்ளது. எனவே, அவர்களுக்கான ஜீவனோபாய மார்க்கத்தையும் வருமானம் ஈட்டித்தரும் முறையையும் அமுல்படுத்த வேண்டும். ஒரு செயலணி தாமதமின்றி ஸ்தாபிக்கப்படல் வேண்டும் - நல்லிணக்க ஆணைக்குழு

* நுண்கடன்களை பெறும்  பெண்கள் அதனை மீள செலுத்த முடியாமல்  பாலியல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் பாரிய அழுத்தங்களை எதிர்கொள்கின்றனர். -
 ஐக்கிய நாடுகளின் விசேட நிபுணர் 2018 இல் அறிக்கை


தகவலறியும் சட்டமூலத்தின் ஊடாக வட மாகாண மகளிர் விவகார அமைச்சலிருந்து கிடைக்கப்பெற்ற  தகவலின் பிரகாரம் 8000  பெண்கள் யுத்தம் காரணமாக கணவனை இழந்துள்ளதுடன் கடும் சிரமங்களுக்கு  மத்தியில் குடும்பங்களை கொண்டு நடத்துகின்றனர்.

இலங்­கையை பாரிய பின்­ன­டை­வுக்கு தள்­ளிய மற்றும் உயிர்ச்சேதங்கள் மற்றும் சொத்­துச்சே­தங்­களை ஏற்­ப­டுத்­திய கொடிய யுத்தம் முடி­வ­டைந்து பத்து வரு­டங்கள் கடந்­து­விட் ­டுள்ள நிலையில் இதனால் பாதிக்­கப்­பட்ட மக்­களின்  நிலைமை இன்னும் துர­திஷ்­ட­வ­ச­மா­கவே காணப்­ப­டு­கின்­றது. 

யுத்­தத்­தினால்  பாதிக்­கப்­பட்ட மக் கள் தமக்­கான நீதியைக் கோரி  போராடி வரு­கின்ற சூழலில்  அதற்காக  சர்­வ­தே­சமும்   ஐக்­கி­ய­நா­டுகள் சபையும்   வலி­யு­றுத்தி வரு­கின்ற நிலையில்  யுத்தம் நடை­பெற்ற பகு­தியில்  பாதிக்­கப்­பட்ட பெண்­களின் நிலைமை  மிகவும் துர­திஷ்­ட­வ­ச­மாக இருக்­கின்­றது.  வட­மா­கா­ணத்தில் யுத்தம் கார­ணமாக கண­வனை இழந்த   பெண்  குடும்­பத்­த­லை­விகள் எதிர்­கொள்கின்ற பிரச்­சி­னைகள் வாழ்­வா­தார சிக்­கல்கள், பொரு­ளா­தாரப் பிரச்­சி­னைகள் என்­பன ஏரா­ள­மாகும். மிக முக்­கி­ய­மாக    யுத்­தத்­தினால்  கண­வனை இழந்த  குடும்பத் தலை­விகள்   மற்றும் ஏனைய கார­ணி­களால் கண­வனை இழந்த   பெண்கள்   தமது வாழ்க்­கையை கொண்டு செல்­வ­தற்கு பொரு­ளா­தார ரீதி­யிலும் வாழ்­வா­தார ரீதி­யிலும் எதிர்­கொள்ளும் பிரச்­சி­னைகள் அதி­க­மாகும்.  

இதில் அதி­க­மான மக்கள் நுண்­கடன் திட்­டங்­க­ளி­னாலும் பாரிய பாதிப்­புக்­களை  சந்­தித்து வரு­கின்­றனர். பொரு­ளா­தாரப் பிரச்­சினை கார­ண­மாக  இவ்­வாறு   நுண்­க­டன்­களைப் பெற்­றுக்­கொள்­கின்ற பெண்கள்  பின் னர் அவற்றை செலுத்த முடி­யாமல் பாரிய அசெ­ள­க­ரி­யங்­களை  எதிர் கொள்­கின்­றனர்.  

ஐ.நா.வின் கண்­டு­பி­டிப்பு  
நுண்­க­டன்­களை பெறும்  பெண்கள் அதனை மீள செலுத்த முடி­யாமல்  பாலியல் ரீதி­யா­கவும் உளவியல் ரீதி­யா­கவும் பாரிய அழுத்­தங்­களை எதிர்­கொள்­வ­தாக இலங்கை வந்­தி­ருந்த  ஐக்­கிய நாடு­களின் விசேட நிபுணர் ஒருவர் கடந்த 2018 ஆம் ஆண்டு தெரி­வித்­தி­ருந்தார். 

இந்த நிலையில் வட­மா­கா­ணத்தில் பல்­வேறு கார­ணி­க­ளினால் கண­ வனை இழந்த அல்­லது கணவ­னி னால் கைவி­டப்­பட்ட  பெண்   குடும்­பத்­த­லை­விகள் நிலை­மைகள் தொடர் பில்   நாம்  தகவல் அறியும் சட்டம் ஊடாக சில தக­வல்­களை வட மாகாண மகளிர் விவ­கார அமைச்சில் பெற்­றுக்­கொண்டோம். அதன்­படி வட­மா­கா­ணத்தில் மொத்­த­மாக 63345   பெண் குடும்பத் தலைவிகள்   வாழ்ந்து வரு­கின்­றனர். ஒரு மாகா­ணத்தில் இந்­த­ள­வு­தூரம் பெண் குடும்­பத்­த­லை­விகள்  இருப்­ப­தா­னது அவர்கள் எந்­த­ளவு தூரம் இந்த சமூ­கத்தில் பிரச்­சி­னை­களை   எதிர்­கொள்­கின்­றனர் என்­பதை   ஊகிக்­கக்­கூ­டி­ய­தாக உள்ளது.    

கண­வனை இழந்­துள்ள பெண்கள் 
வட­மா­காண மகளிர் விவ­கார அமை ச்சின் தக­வலின் பிர­காரம் வட­மா­கா­ணத்தின்    63345  பெண்  குடும்பத் தலை­விகள் வாழ்ந்­து­கொண்­டி­ருக்­கின்­றனர்.  அவர்­களில்  8004  பெண்கள்  போரின் கார­ண­மாக கண­வனை இழந்த நிலையில் உள்­ள­துடன்  குடும்­பத்­த­லை­வி­க­ளா­கவும் இருக்­கின்­றனர்.   அதே­போன்று 38991 பெண்கள்  இயற்­கை­யாக கண­வனை இழந்த நிலையில்  பெண் குடும்பத் தலை­வி­க­ளாக உள்­ளனர்.  அதே­போன்று 7253 பேர்  கண­வ­னினால் கைவி­டப்­பட்ட நிலையில் பெண் குடும்பத் தலை­வி­க­ளாக உள்­ளனர்.  அது­மட்­டு­மன்றி ஏனைய கார­ணங்­க­ளினால் 9097

   பெண்கள்   குடும்பத் தலை­வி­க­ளாக இருக்­கின்­றனர். ஏனைய  கார­ணிகள் என்ற பிரிவின் கீழ்   கணவன்  ஊன­முற் ­ற­வ­ராக இருத்தல்  அல்­லது காணா­மல்­போ­ன­வ­ராக  இருத்தல் போன்ற விட­யங்கள் உள்­ள­டங்­கு­கின்­றன. 


யாழ்ப்­பா­ணத்­தி­லேயே  அதிகம் 
யாழ்ப்­பாண மாவட்­டத்­தி­லேயே அதி­க­ளவு  குடும்பப் பெண் தலை­விகள்  உள்­ளனர்.  யாழ். மாவட்­டத்தில்  36334 குடும்பப் பெண்  தலை­வி­களும் கிளி­நொச்சி மாவட்­டத்தில் 8435  பெண் குடும்பத் தலை­வி­களும் முல்­லைத்­தீவு மாவட்­டத்தில் 5961 குடும்பப் பெண் தலை­வி­களும் வாழ்­கின்­றனர். அதே­போன்று வவு­னியா மாவட்­டத்தில் 6712 பெண் குடும்பத் தலை­வி­களும்   மன் னார் மாவட்­டத்தில்  5903  குடும்பத் தலை­வி­களும் உள்­ளனர்.  போர் கார­ண­மாக 8000 பெண்கள் கண­வனை இழந்­துள்­ளனர் 

இது இவ்­வா­றி­ருக்க வட­மா­கா­ணத் தில் யுத்தம் கார­ண­மாக  8004   கண­வனை இழந்த  பெண்கள்  வாழ்­கின்­ற னர். அதில் யாழ்ப்­பாண மாவட்டத்தி­ லேயே அதி­க­மான கண­வனை இழந்த பெண்கள் உள்­ளனர்.  யாழ். மாவட்­டத் தில் யுத்தம் கார­ண­மாக 3193  பெண்கள்   கண­வனை இழந்த நிலையில் குடும்­பத்­த­லை­வி­க­ளாக இருக்­கின்­றனர். கிளி­ நொச்சி மாவட்­டத்தில் 1514 பெண்கள்   யுத்­தத்­தினால் கண­வனை இழந்­துள்­ளனர்.  மேலும் முல்­லைத்­தீவு மாவட்­டத்தில்  1458  பெண்கள்  யுத்­தத்­தினால்   கண­வனை  இழந்து  குடும்பத் தலை­வி­க­ளாக உள்­ளனர். அத்­துடன்  வவு­னியா மாவட்­டத்தில் 1296 பெண்­களும்  மன்னார் மாவட்­டத்தில் 543 பெண்­களும்  யுத்தம் கார­ண­மாக  கண­வனை இழந்த  நிலையில் தங்கள் குடும்­பங்­களை கொண்டு நடத்­த­வேண்­டிய நிலை­மையில் இருக்­கின்­றனர். 

இந்த நிலையில் வட­மா­கா­ணத்தில்    யுத்­தத்­தி­னாலும் ஏனைய கார­ணி­க­ளி ­னாலும் கண­வனை இழந்து குடும்­பத்தை கொண்டு நடத்­த­வேண்­டிய சூழலில்  சுமார்  63 ஆயிரம் பெண்கள் இருக்­கின்­றமை என்­பது   சாதா­ரண விட­ய­மல்ல.  இந்த மக்கள் தொடர்­பாக அர­சாங்கம்  சரி­யா­ன­தொரு வேலைத்­திட்­டத்தை முன்­னெ­டுக்­க­வேண்டும். அவர்­க­ளது வாழ்­வா­தார பிரச்­சி­னைகள் தொடர்­பாக ஆராய்ந்து பொரு­ளா­தா­

ரத்தை வலுப்­ப­டுத்தும் திட்­டங்­களை முன்­னெ­டுப்­ப­துடன் அந்த மக்­க­ளுக்­கான பொரு­ளா­தார உத­வி­களை செய்­வதும் அவ­சி­ய­மா­கின்­றது. 

அத்­துடன்  கடந்த அர­சாங்க காலத்தில் இழப்­பீட்டு அலு­வ­லகம் அமைக்­கப்­பட்­டது. அதற்கு ஆணை­யா­ளர்­களும் நிய­மிக்­கப்­பட்­டனர். எனினும் அந்த அலு­வ­லகம் இன்னும்   சரி­யான முறையில் செயற்­பட ஆரம்­பிக்­கப்­ப­ட­வில்லை. அத­னூ­டாக இவ்­வாறு கண­வனை இழந்து குடும்­பத்தை சுமந்து கொண்­டி­ருக்கும் பெண் குடும்பத் தலை­வி­க­ளுக்கு உரிய நிவா­ர­ணங்­களை வழங்­கு­வது அவ­சி­ய­மா­கின்­றது. 

வெறு­மனே 244 தொழில் வாய்ப்­புக்கள் 
வட­மா­காண   மகளிர் விவ­கார அமைச்சு  தக­வ­ல­றியும்   உரிமைச்சட்­டத்தின் கீழ் எமக்கு வழங்­கிய  தக­வல்­களின் பிர­காரம் இது­வரை வட­மா­கா­ணத்தில்   இவ்­வாறு  பெண்  குடும்பத் தலை­வி­க­ளுக்­காக  244  தொழில்கள் உரு­வாக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன.  இதில் ஆடு வளர்ப்பு, மெழு­கு­திரி தயா­ரித்தல்,  உணவு தயா­ரித்தல், கைவி­னைப்­பொ­ருட்கள் தயா­ரித்தல் போன்ற    துறை­களில் தொழில்­வாய்ப்­புக்கள் உரு­வாக்­கப்­பட்­டுள்­ள­தாக அறி­விக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. 

பெண்கள் தலை­மை­யி­லான குடும்­பங்­க­ளுக்கு வாழ்­வா­தார  ஆத­ர­வுக்­காக   கடந்த காலத்தில்  30 மில்­லியன் ரூபா ஒதுக்­கப்­பட்டு அதில் 29.513  மில்­லியன் ரூபா செல­வி­டப்­பட்­டி­ருப்­ப­தா­கவும் வட­மா காண   மகளிர் விவ­கார அமைச்சு அறி­வித்­தி­ருக்­கி­றது.   

வாழ்­வா­தார உத­வி­களின் அவ­சியம் 
எனவே  சுமார் 63 ஆயிரம் பேர்   கண­வனை இழந்து  பெண் குடும்­பத்­த­லை­வி­க­ளாக உள்ள நிலையில் அவர்­களில் ஒரு குறிப்­பிட்ட  எண்­ணிக்­கை­யா­ன­வர்­க­ளுக்கு   உத­வி­களும் தொழில்­வாய்ப்­புக்­களும் கிடைத்­துள்­ள­மையை காண முடி­கின்­றது. இந்த நிலைமை முன்­னேற்றம் ஏற்­ப­ட­வேண்டும். பாதிக்­கப்­பட்­டுள்ள  அனைத்து  பெண் குடும்பத் தலை­வி­க­ளுக்கும்  சரி­யான வாழ்­வா­தார உத­விகள் வழங்­கப்­ப­ட­வேண்டும் என்­ப­துடன்  அவ ர்கள் பொரு­ளா­தார ரீதியில்   வலுப்­ப­டுத்­தப்­ப­ட­வேண்­டி­யது அவ­சி­ய­மா­கி­றது. இவ்­வாறு பெண் குடும்­பத்­த­லை­வி­க­ளுக்கு

உத­வி­களை வழங்­கு­வதில்   சில தடைகள் இருப்­ப­தாக வட­மா­காண  மகளிர் விவ­கார அமைச்சு எமது  தக­வ­ல­றியும்  உரிமை சட்­டத்தின் கீழான கேள்­விக்கு பதி­ல­ளித்­தி­ருக்­கி­றது.

தடைகள்
அதா­வது  சில விட­யங்கள்  பெண்கள்  விவ­கார அமைச்சின் கீழ் உள்­வாங்­கப்­ப­ட­வில்லை.  பெண்கள்  விவ­கார பிரிவு மற்றும்  புனர்­வாழ்வு பிரி­வுக்­கான அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட  பணி­யா­ளர்கள்   இன்னும் நிய­மிக்­கப்­ப­ட­வில்லை. பெண்கள் விவ­கா­ரங்கள் மற்றும் புனர்­வாழ்வு பிரி­வு­க­ளுக்­கான நிதி ஒதுக்­கீடு ஆகி­யவை  இந்த மக்­க­ளுக்கு  உத­வி­களை வழங்­கு­வதில்  தடை­களை ஏற்­ப­டுத்­து­வ­தாக வட­மா­காண  மகளிர் விவ­கார அமைச்சு பதி­ல­ளித்­தி­ருக்­கி­றது. 

இந்த நிலையில் 63 ஆயிரம் பெண்  குடும்பத் தலை­விகள் மற்றும் யுத்தம் கார­ண­மாக கண­வனை இழந்த 8 ஆயிரம்  பெண் குடும்பத் தலை­விகள் தமது வாழ்க்­கை­யையும்  குடும்­பத்­தையும் கொண்டு செல்­வதில் எந்­த­ள­வு­தூரம்  சிர­மங்­க­ளையும் சவால்­க­ளையும் எதிர்­கொள்­வார்கள் என்­பதை புரிந்­து­கொள்ள முடி­கின்­றது. யுத்தம் முடி­வ­டைந்து பத்து வரு­டங்கள் கடந்தும் இது­வரை இந்தப் பெண் குடும்பத் தலை­விகள் தொடர்­பாக  சரி­யா­ன­தொரு வேலைத்­திட்டம் அல்­லது அந்த மக்­க­ளுக்­கான வேலைத்­திட்­டங்கள் வந்து சேராமல் இருக்­கின்­றமை கவ­லைக்­கு­ரிய விட­ய­மாகும்.  யுத்தம் முடிந்­த­வுடன் இந்த விடயம் விசே­ட­மாக ஆரா­யப்­பட்டு அவர்­க­ளுக்கு இந்த  நிவா­ர­ணங்கள் வழங்­கப்­பட்­டி­ருக்க வேண்டும் என்­ப­துடன்  அந்த மக்கள் பொரு­ளா­தார ரீதியில் வலு­வூட்­டப்­பட்­டி­ருக்­க­வேண்டும். 

பெண் குடும்ப தலை­விகள் எதிர்­கொள்ளும் சவால்கள் 
தற்­போ­தைய சூழலில்  ஒரு ஆண் குடும்பத் தலை­வ­ரி­னா­லேயே தனது குடும்­பத்தை கொண்டு செல்­வதில் வாழ்க்­கையை நடத்­து­வதில் பாரிய  சவால்கள் எதிர்­கொள்­ளப்­ப­டு­கின்­றன. கல்வி, சுகா­தாரம், போக்­கு­வ­ரத்து என  பல வழி­களில்   குடும்­பங்கள் சவால்­களை எதிர்­கொண்டு வரு­கின்­றன. இந்த நிலையில் யுத்­தத்தினால் பாதிக்­கப்­பட்ட  ஒரு பிர­தே­சத்தில் கண­வனை இழந்த பெண் குடும்பத் தலை­விகள் எவ்­வா­றான  சவால்­களை எதிர்­கொள்வர் என்­பது தொடர்­பாக சிந்­தித்­துப்­பார்க்­க­ வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். 

தற்­போது அதி­கா­ரத்­துக்கு வந்­தி­ருக்­கின்ற ஜனா­தி­பதி கோத்­த­பாய ராஜ­பக் ஷ இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து தேவை­யான நட­வ­டிக்­கை­களை  விரை­வாக எடுக்­க­வேண்டும். 2010ஆம் ஆண்டு அப்­போ­தைய ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷ­வினால்  நிய­மிக்­கப்­பட்ட  கற்­ற­றிந்த பாடங்­களும்  நல்­லி­ணக்­கமும்  தொடர்­பான ஆணைக்­குழு சில விசே­ட­மான பரிந்­து­ரை­களை முன்­வைத்­தி­ருந்­தது. 

நல்­லி­ணக்க  ஆணைக்­கு­ழுவின் பெண்கள் குறித்த பரிந்­து­ரைகள் 
விசே­ட­மாக கற்­றுக்­கொண்ட பாடங் கள் மற்றும் நல்­லி­ணக்க ஆணைக்­கு­ழுவின் 285 பரிந்­து­ரை­களில் 7 பரிந்­து­ரைகள் நேர­டி­யாக பெண்கள் தொடர்­பான விட­யங்­களை முன்­வைத்­தி­ருந்­தது.  அந்த முக்­கிய பரிந்­து­ரைகள் வரு­மாறு, 

1 குடும்­பத்தின் தலைமைப் பொறு ப்­பினை ஏற்க நிர்ப்­பந்­திக்கப்­பட் ­டுள்ள. பெண்­களின் நல்­வாழ்­வினை உறு­திப்­ப­டுத்தி நல்­லி­ணக்­கத்­துக்­கான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­வது அவ­சியம் 

2. அநே­க­மான பெண்கள் தமது கண­வன்­மாரை இழந்­துள்­ளனர் அல்­லது இருக்­கு­மிடம் தெரி­யா­தி­ருக்­கின்­றனர். சிலர் முகாம்­களில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ளனர். இத்­த­கைய மன­வே­த­னைகள் இருக்­கத்­தக்­க­தாக மேற்­படி குடும்­பங்­களின் சிறு­வர்­க­ளையும் முதி­ய­வர்­க­ளையும் பரா­ம­ரிக்க வேண்­டி­யது இப்­பெண்­களின் பொறுப்­பா­க­வுள்­ளது. எனவே, அவர்­க­ளுக்­கான ஜீவ­னோ­பாய மார்க்­கத்­தையும் வரு­மானம் ஈட்­டித்­தரும் முறை­யையும் அமுல்­ப­டுத்த வேண்டும்.

3. இந்தப் பணியில் உத­வி­ய­ளிப்­ப­தற்கு சர்­வ­தேச சமூ­கங்­களும் சர்­வ­தேச ஸ்தாப­னங்­களும் சிவில் அமைப்­பு­களும் தமது அறி­வையும் வளங்­க­ளையும் வழங்கும் வகையில் அரசு முன்­னின்று செயற்­பட வேண்டும். உள்­ளூ­ராட்சி நிறு­வ­னங்கள், அர­சியல் தலை­மைகள் மற்றும் சிவில் சமூக அமைப்­புக்கள் பாதிக்­கப்­பட்­டோரின் மன­நலம் கருதி நட­வ­டிக்­கை­க­ளையும் தீர்­வு­க­ளையும் மேற்­கொள்­வ­தற்கு அரசு வச­தி­களை ஏற்­ப­டுத்த வேண்டும்.

4.  நீடித்த யுத்தம் கார­ண­மா­கவும் குடும்­பத்தில் ஆண்­களை இழந்த கார­ணத்­தி­னாலும் கல்­வியைத் தொட­ர­மு­டி­யாது பல பெண்கள் இருக்­கின்­றனர். அவர்­க­ளுக்கு முறைசார் அல்­லது முறை­சாரா கல்வி வச­தி­களை ஏற்­ப­டுத்தி கொடுப்­ப­தோடு தொழிற்­ப­யிற்சி அல்­லது வாழ்­வா­தார முறை என்­ப­வற்றை உரு­வாக்க உதவ வேண்டும்.

5. பெண்கள் தமது பாது­காப்பை உறு­தி­செய்­யக்­கூ­டிய வகை­யிலும் தமது மனித கௌரவம் பாது­காக்­கக்­கூ­டிய வகை­யிலும் அரசு நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள வேண்டும். நல்­லி­ணக்­கத்­துக்­கான முன் நிபந்­த­னை­யாக இத்­த­கைய சூழலை உரு­வாக்­கு­வது அரசின் பொறுப்­பாகும் என ஆணைக்­குழு கரு­து­கின்­றது.

6.  காணா­மற்­போ­ன­வர்கள், கடத்­தப்­பட்­ட­வர்கள், எதேச்­ச­தி­கா­ர­மாக நீண்­ட­காலம் தடுத்து வைத்தல், காணா­மற்­போகச் செய்தல் என்­பன பெண்­களை நேர­டி­யாக பாதிக்கும் விட­யங்­க­ளாகும். மேற்­படி பாதிப்­புக்கு உள்­ளா­னவர் தமது கண­வ­ரா­கவோ, தந்­தை­யா­கவோ, மக­னா­கவோ, சகோ­த­ரர்­க­ளா­கவோ இருக்­கலாம். தமது அன்­புக்­குரி­ய­வர்கள் இருக்கும் இடம் அறி­யா­விட்டால் உண்­மை­யையும் சட்­ட­ரீ­தி­யான பாது­காப்­பையும் பெறும் உரிமை அவர்­க­ளது ஜன­நா­யக உரி­மை­யாகும். நல்­லி­ணக்க முயற்­சிக்கு இது முன் நிபந்­த­னை­யாகும்.

7.  இப்­பி­ரச்­சி­னைக்கு நிலை­பே­றான தீர்­வு­களைக் காண்­ப­தாயின் நிறு­வ­னங்­க­ளுக்­கி­டை­யி­லான முயற்­சி­களும், ஒருங்­கி­ணைந்த முயற்­சி­யினால் மட்­டுமே அதை எதிர்­கொள்ள முடியும் என ஆணைக்­குழு கரு­து­கி­றது. மேற்­கு­றிப்­பிட்ட பாதிப்­புக்­குள்­ளான அனை­வ­ரது தீர்­வு­களைக் காண்­ப­தற்கும், தேவை­யான நிவா­ர­ணங்­களை வழங்­கு­வ­தற்கும் ஒரு செய­லணி தாம­த­மின்றி ஸ்தாபிக்­கப்­படல் வேண்டும்.

மேற்கூறிய ஏழு பரிந்துரைகளே பெண்கள் முகம்கொடுக்கும் நேரடியான பிரச்சினைகளை சுட்டிக்காட்டுகின்ற பரிந்துரைகளாகும். 

 அந்த வகையில் பல முக்கியமான  பரிந்துரைகளை  நல்லிணக்க ஆணைக்குழு முன்வைத்திருந்தது. அதாவது பாதிக்கப்பட்டுள்ள பெண்களுக்கு  தேவையான வசதிகள் உரிய முறையில் செய்துகொடுக்கப்படவேண்டும் என்பது நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் முக்கியமாக உள்ளது.  கணவனை இழந்துள்ள பெண்களின்  வாழ்வாதாரப் பிரச்சினையை எவ்வாறு தீர்ப்பது முக்கியமாகும். அதேபோன்று அந்த பெண்கள் சமூகப் பாதுகாப்புடன் கெளரவமான முறையில் சமூகத்தில் வாழ்வதற்கான ஏற்பாடுகள்  அவசியம் என்பது குறித்தும் நல்லிணக்க ஆணைக்குழு   விசேடமான  பரிந்துரைகளை முன்வைத்துள்ளமையை காண முடிகின்றது. 

ஆனால் கடந்த பத்துவருடங்களில் அந்த  நல்லிணக்க ஆணைக்குழுவில் பெண்கள் தொடர்பான பரிந்துரைகள் கூட முழுமையாக  அமுல்படுத்தப்படாத நிலைமையே நீடிக்கிறது. எனவே   இந்த மக்களின்  நிலைமையை  புரிந்து கொண்டு அரசாங்கம் செயற்படவேண்டும்.  ஜனாதிபதி கோத்தபாய ராஜபக் ஷ  பொருளாதார அபிவிருத்தி குறித்தும் முழுநாட்டுக்கும் சமமான அபிவிருத்தி குறித்தும் பேசிவருகின்றார். எனவே இவ்வாறு  வடமாகாணத்தில் பாதிக்கப்பட்டுள்ள  பெண் குடும்பத் தலைவிகளின் குடும்பங்களை  பொருளாதார ரீதியில் வலுப்படுத்துவதற்கும் அவர்கள் மத்தியில் புதிய எதிர்பார்ப்புக்களை ஏற்படுத்தி சமூகத்தில் கெளரவமாகவும் பாதுகாப்புடனும் வாழும் சூழலை ஜனாதிபதி ஏற்படுத்துவார் என  மக்கள் நம்புகின்றனர். 

-ரொபட் அன்டனி -