மன்னாரில் கொள்ளை - மூவர் கைது - ஒரு தொகை நகைகளும் மீட்பு

Published By: Digital Desk 4

12 Jan, 2020 | 02:36 PM
image

மன்னார் எழுத்தூர் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கடந்த ஞாயிற்றுக்கிழமை(05) அதிகாலை இடம் பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் உற்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்தோடு, கொள்ளையடிக்கப்பட்ட நகைகளில் ஒரு பகுதி மீட்கப்பட்டுள்ளதாக மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி  தெரிவித்தார்.

மன்னாரில் இடம்பெற்ற குறித்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் அவரிடம் இன்று ஞாயிற்றுக்கிழமை (12) வினவிய போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

மன்னார் எழுத்தூர் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தம்பதியினரை கட்டி வைத்து விட்டு சுமார்  25 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக மன்னார் பொலிஸார் தீவிர விசாரனைகளை மேற்கொண்டு வந்தனர்.

அதற்கமைவாக மன்னார் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகரின் பணிப்புரைக்கு அமைவாக மன்னார் பொலிஸார் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

அதற்கமைவாக யாழ்ப்பாணத்தில் வைத்து சந்தேக நபர் ஒருவர் உற்பட மூவர் கைது செய்யப்பட்டனர்.

கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை ஈடுவைக்கச் சென்ற போது குறித்த மூன்று நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் ஒருவர் கொள்ளைச் சம்பவத்துடன் நேரடியாக தொடர்பு பட்டவர் என ஆரம்ப கட்ட விசாரனைகளில் இருந்து தெரிய வருகின்றது.

கொள்ளையடிக்கப்பட்ட நகைகளில் 'தாழிக் கொடி'  உற்பட ஒரு பகுதி நகைகள் மீட்கப்பட்டுள்ளன. தொடர்ந்தும் பொலிஸார் தீவிர விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் சனிக்கிழமை கீரி பகுதியில் இடம் பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பிலும் மன்னார் பொலிஸார் தீவிர புலன் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற விசாரனைகளுக்கு அமைய கொள்ளைச் சம்பவத்துடன் ஈடுபட்ட பிரதான சந்தேக நபர்கள் அனைவரும் வெகு விரைவில் கைது செய்யப்படுவார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01