சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கடந்த மே மாதத்தில் 10 சதவீதம் அதிகரித்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.


கடந்த வருட மே மாதத்தில் 113,529  சுற்றுலாப் பயணிகள் வருகைத் தந்திருந்த நிலையில், இவ்வருடம்  10 சதவீதம் அதிகரித்து சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை  125044 ஆக உயர்ந்துள்ளது. 
இதேவேளை கடந்த 5 மாதங்களில் இலங்கைக்கு வருகைத்தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 846,222 ஆக உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
கடந்த வருடம் இந்த  காலப்பகுதிக்குள் இலங்கைக்கு வருகைத்தந்த  சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 714,584 ஆக காணப்பட்டதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது.
கடந்த 5 மாதங்களில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 18.2 சதவீத வளர்ச்சி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
குறித்த சுற்றுலாப் பயணிகளின் வருகையில் அமெரிக்காவிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 15.7 சதவீதம் அதிகரித்துள்ளதெனவும் மேற்கு ஐரோப்பா பகுதியிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 9.5 சதவீதத்தால் அதிகரித்துள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுற்றுலாப் பயணிகள் அதிகமாக ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ், ஜேர்மனி போன்ற நாடுகளிலிருந்து வருகைத்தருவதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது.­­­­­