அயர்­லாந்து அணிக்­கெ­தி­ரான இரண்­டா­வது சர்­வ­தேச ஒருநாள் போட்­டியில் மேற்­கிந்­தியத் தீவுகள் அணி ஒரு விக்­கெட்டால் இறுக்கமான வெற்­றியை ஈட்­டி­யது. மேற்­கிந்­தியத் தீவுகள் - மற்றும் அயர்­லாந்து அணி­க­ளுக்கு இடை­யி­லான 2-ஆவது ஒருநாள் போட்டி பிரிட்ஜ் ­ட­வுனில் நடை­பெற்­றது.

முதலில் துடுப்­பெ­டுத்­தா­டிய அயர்­லாந்து 237  ஓட்­டங்­களை குவித்­தது.  238 ஓட்­டங்­களை பெற்றால்  வெற்றி என்ற இலக்­குடன் மேற்­கிந்­தியத் தீவுகள் அணி கள­மி­றங்­கி­யது. முன்­வ­ரிசை வீரர்கள் சொற்ப ஓட்­டங்­க­ளுடன்  ஆட்­ட­மி­ழக்க, மேற்­கிந்­தியத் தீவுகள் அணி 76 ஓட்டங்களுக்கு 3 விக்­கெட்­டுக்­களை இழந்­தது.

அதன்­பின்னர் நிக்­கலஸ் பூரன், பொல்லார்ட்  அணியை சரிவிலிருந்து மீட்­ட­னர். எனினும், மேற்­கிந்­தியத் தீவுகள்  9 விக்­கெட்­டுக்­களை இழந்து 47.4 ஓவரில் 232 ஓட்­டங்­களை  எடுத்­தி­ருந்­த­போது கடைசி விக்­கெட்­டுக்­காக வோல்­ஸுடன்  கொட்ரெல் ஜோடி சேர்ந்தார். 

கடைசி ஓவரில் ஐந்து ஓட்­டங்கள் தேவைப்­பட்ட நிலையில் முதல் இரண்டு பந்­து­களில் ஒவ்­வொரு ஓட்­டங்கள் எடுக்­கப்­பட்­டன. 3 மற்றும் 4 ஆவது பந்­து­களில்  கிடைத்த இரண்டு  'ரன்­அவுட்' வாய்ப்­புக்­க­ளையும் அயர்­லாந்து அணி­யினர் தவ­ற­   விட்­டனர்.

ஐந்­தா­வது பந்தை எதிர்­கொண்ட கொட்ரெல் சிக்­ஸ­ராக விளாச மேற்­கிந்­தியத் தீவுகள் 49.5 ஓவர்­களில் 242 ஓட்­டங்­களை பெற்று ஒரு விக்­கெட்­டினால் வெற்­றி­யீட்­டி­யது.

 11 ஆவது துடுப்பாட்ட வீர­ராக களமிறங்­கிய கொட்ரெல் சிக்ஸர் அடித்து  அணியை வெற்றிபெறச் செய்­த­தனால், 11 ஆவது வீரராக களமிறங்கிய வீரரொருவர் சிக்ஸர் அடித்து அணியை வெற்றி பெற வைப்பது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில்  இதுவே முதல் தடவையாகும் என்ற அரிய சாதனையையும் படைத்தார்.