யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் இணைந்து சுற்றிவளைப்புத் தேடுதல் நடவடிக்கையை இன்று மேற்கொள்ளப்பட்டனர்.

புதிய அரசு பதவியேற்றதன் பின்னர் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் சுற்றிவளைப்புத் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

தேசிய பாதுகாப்பினை கருத்திற்கொண்டு யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இன்றைய குருநகர் பகுதியில் சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன என்று பொலிஸார் தெரிவித்தனர்.

அதிகாலை 5.30 மணி தொடக்கம் காலை 6 மணி வரை இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பொலிஸார், சிறப்பு அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர் இணைந்து இந்த சோதனை நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.

இந்த நடவடிக்கையின் போது எவரும் கைது செய்யப்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.