ஜனாதிபதி கோத்தா பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பெற பூரண ஒத்துழைப்பு: மைத்­தி­ரி­

Published By: J.G.Stephan

12 Jan, 2020 | 12:24 PM
image

(எம்.மனோ­சித்ரா)

பொதுத் தேர்­தலில் வெற்றி பெற்று பாரா­ளு­மன்­றத்தில் மூன்றில் இரண்டு பெரும்­பான்மை பெறு­வ­தற்கு ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­ப­க் ஷ­வுக்கு ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி முழு­மை­யான ஒத்­து­ழைப்­பினை வழங்கும் என்று சுதந்­திரக் கட்­சியின் தலை­வரும் முன்னாள் ஜனா­தி­ப­தி­யு­மான மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்தார்.

களுத்­து­றையில் இடம்­பெற்ற மக்கள் சந்­திப்பில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கையில் இதனை தெரி­வித்த அவர் மேலும் கூறி­ய­தா­வது :

ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­ப­க் ஷவின்  தலை­மைத்­து­வத்தின் கீழ் நாட்டில் புதிய அர­சாங்­க­மொன்று உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது. கடந்த நவம்பர் மாதம் நடை­பெற்ற ஜனா­தி­பதித் தேர்­தலில் கோத்­தா­பய ராஜ­ப­க் ஷவை வெற்றி பெறச் செய்­வ­தற்கு ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி முழு­மை­யான அர்ப்­ப­ணிப்­புடன் உத­வி­யி­ருந்­தது.               

கோத்­தா­பய ராஜ­பக்ஷ இந்­நாட்டின் ஜனா­தி­ப­தி­யாகத் தெரிவு செய்­யப்­பட  வேண்டும் என்று எண்ணி நாம் கட்சி ரீதி­யாக அவ­ருக்கு ஆத­ர­வ­ளிக்க தீர்­மா­னித்தோம். ஆட்சி மாற்றம் ஏற்­பட வேண்டும் என்று எதிர்­பார்த்தோம். குறிப்­பாக நாட்­டுக்கு புதிய பாதையில் பய­ணிக்க வேண்­டிய தேவை ஏற்­பட்­டி­ருப்­பது உண­ரப்­பட்­டது.

சுமார் ஒன்­றரை மாதத்தில் பாரா­ளு­மன்ற தேர்தல் இடம்­பெ­ற­வுள்­ளது. ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி பொது­ஜன பெர­மு­ன­வு­டனும் மேலும் பல கட்­சி­க­ளு­டனும் புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தங்­களில் கையெ­ழுத்­திட்­டுள்­ளது. இதன் மூலம் புதிய ஜனா­தி­ப­திக்கு அதிக பலத்தை வழங்­கு­வதே எமது எதிர்­பார்ப்­பாகும்.

இதற்­காக பாரா­ளு­மன்­றத்தில் மூன்றில் இரண்டு பெரும்­பான்மை பெறு­வது அவ­சி­ய­மாகும். அவ்­வாறு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பாண்மையைப் பெற்றுக் கொள்வதற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுக்கு முழுமையாக ஆதரவை வழங்கும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:25:16
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:25:52
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22