கொலம்பியாவைச் சேர்ந்த 6,000  பேர் சமாதானத்தின் பெயரால் பொகோட்டா நகரிலுள்ள பிரதான சதுக்கத்தில்  நிர்வாணக் கோலத்தில் ஒன்றுகூடியுள்ளனர்.

அவர்கள் 7  பாகை செல்சியஸ் அளவான குறைந்த வெப்பநிலையையும் பொருட்படுத்தாது இவ்வாறு கூடியிருந்தனர்.

அந்நாட்டு அரசாங்கம் இடதுசாரி கொலம்பிய புரட்சிகர ஆயுதப் படை கிளர்ச்சியாளர்களுடன்  சமாதான உடன்படிக்கையொன்றை செய்து கொள்வதில் வெற்றியை நெருங்கியுள்ள நிலையிலேயே இந்நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இது  பொகோட்டாவில் கடந்த  6  வருடங்களில்   இடம்பெற்ற மாபெரும் நிர்வாண ஒன்றுகூடல் நிகழ்வாக இது உள்ளது.