(ஆர்.ராம்)
தற்போதைய அரசாங்கத்திற்கு அதிகாரங்களை பகிர்ந்தளிப்பதற்கான மக்கள் ஆணை வழங்கப்படவில்லை. ஆகவே அச்செயற்பாட்டினை முன்னெடுக்க முடியாத சூழல் காணப்படுகின்றது என்று மின்சக்தி இராஜாங்க அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
அத்துடன் தமிழ் மக்களின் உடனடிப் பிரச்சினைகளுக்கு தீர்வளித்து பொருளாதார ரீதியாக அவர்களை வலுப்படுத்திய பின்னரும் இனங்களுக்கிடையில், பிரச்சினைகள் காணப்படுமாயின் அதுகுறித்து தமிழ்த் தரப்புக்கள் கோரிக்கை விடுத்தால் பேச்சுக்களை முன்னெடுப்பதற்கு தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி கோத்தாபய தனது அக்கிராசன உரையில் பெரும்பான்மை மக்களின் தீர்மானத்தினை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும், அதிகாரப்பகிர்வை விடவும் பொருளாதார முன்னேற்றமே அவசியம் என்றும் தெரிவித்துள்ள கருத்துக்கள் தொடர்பில் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவ்விடயங்கள் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழ் மக்களின் உடனடியப்பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு பொருளாதார ரிதீயாக அவர்களை முன்னேற்றமடையச் செய்ய வேண்டும் என்று நிலைப்பாட்டிலேயே ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்~ உள்ளார். ஆகவே அதுகுறித்து செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மேலும் தற்போதைய அரசாங்கத்திற்கு அதிகாரங்களை பகிர்வதற்கான மக்கள் ஆணை இல்லை. ஆகவே அந்தச் செயற்றிட்டத்தினை உடன் முன்னெடுப்பதற்கான சாத்தியப்பாடுகள் குறைவாகவே உள்ளன.
எம்மைப்பொறுத்தவரையில் வடக்கு மக்களின் உடனடிப்பிரச்சினைகள் தீர்க்கப்பட்டதன் பின்னர் ஏனைய அதிகாரப்பகிர்வு உள்ளிட்ட விடயங்களின் பிரச்சினைகள் காணப்படுமாயின் அது குறித்து தமிழ்த் தரப்புக்கள் கோரிக்கை விடுத்தால் நாம் பேச்சுவார்த்தை செய்வதற்கு தயாராக இருக்கின்றோம்.
குறிப்பாக, 13ஆம் திருத்தச்சட்டத்தில் கூறப்பட்டுள்ள அதிகாரப்பகிர்வு விடயத்திலிருந்து பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதில் பிரச்சினைகள் இல்லை.
அதேநேரம், ஜனாதிபதியின் அக்கிராசன உரையானது தவறாக அர்த்தப்படுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதியைப் பொறுத்தவரையில் அனைத்து சமுகங்களையும் அவர் ஒரேமாதிரியே பார்க்கின்றார். ஆனால் தனக்கு பெரும்பான்மை சிங்கள மக்களே அதிகமாக வாக்களித்துள்ளார்கள் என்றே அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.
அதற்காக சிறுபான்மை மக்களை தவிர்த்துசெயற்படுவதாக கூறவில்லை. தமிழ், முஸ்லிம் மக்களின் விடயங்களையும் உள்ளடக்கியே அவருடைய செயற்றிட்டங்கள் அமைந்திருக்கும். ஆதில் எவ்விதமான மாற்றுக்கருத்திற்கும் இடமில்லை என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM