விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா மேலும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார். 

இம்மாதம் 22 ஆம் திகதி வரை விளக்க மறியல் நீடிக்கப்பட்டுள்ளது. 

கடந்த 25.5.2005ம் ஆண்டு மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் ஆராதனையில் ஈடுபட்டிருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பான சந்தேகத்தின் பேரில் பிள்ளையான் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

- ஜவ்பர்கான்