ஹரியை காப்பாற்றிய நடிகர்.!

Published By: Robert

08 Jun, 2016 | 10:58 AM
image

ராமய்யா சினி கிரியேசன்ஸ் பட நிறுவனம் சார்பாக ஓசூர். எம். ராமய்யா தயாரிக்கும் படத்திற்கு “ காதல் அகதீ “ என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் கதாநாயகனாக ஹரிகுமார் நடிக்கிறார். தூத்துக்குடி, மதுரைசம்பவம், போடிநாயக்கனூர் கணேசன், திருத்தும் போன்ற படங்களில் நடித்த ஹரிகுமார் இந்த படத்தில் வேறு விதமான கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இரண்டாவது நாயகனாக சுதர்சன் ராஜ் நடிக்கிறார்.

கதாநாயகியாக ஆயிஷா நடிக்கிறார். இன்னொரு நாயகியாக மமதா ராவத் நடிக்கிறார். மற்றும் பாண்டியராஜன், தேவதர்ஷினி, சிங்கமுத்து, லொள்ளுசபா மனோகர், பிளாக்பாண்டி, மைசூர் மஞ்சுளா, திருச்சி பாபு, ஷாமி ஆகியோர் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு - ஷியாம்ராஜ்

விவேகா பாடல்களுக்கு பர்ஹான்ரோஷன் இசையமைக்கிறார்.

கலை - பத்மநாபன் / ஸ்டன்ட் - மிரட்டல் செல்வா

நடனம் - ராதிகா / தயாரிப்பு மேற்பார்வை - கார்த்திக் ரெட்டி

தயாரிப்பு - M. ராமய்யா

எழுதி இயக்குபவர் - ஷாமி திருமலை

இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்கும் ஹரிகுமாரை கொல்வதற்காக எதிரிகள் தாக்கும்போது அதை பார்த்த ஹரிகுமாரிடம் வேலை செய்யும் சுதர்சன் ராஜ் எதிரிகளோடு போராடுவார். தனது உயிரை பணையம் வைத்து தனது முதலாளி ஹரிகுமாரின் உயிரை காப்பாற்றுகிறார்.  ஹரிகுமார் அவரை நம்பிக்கைக்குரிய நண்பனாக்கி கொள்கிறார்.  அவர் காட்டும் அந்த அன்பிற்கு சுதர்சன் ராஜ் கடைசிவரை நன்பிக்கைகுரியவராக இருக்கிறார். தனது முதல் படத்தில் நடித்துள்ள சுதர்சன் ராஜ் மிகவும் அருமையாக நடித்துள்ளார். இந்த படம் வெளியான பிறகு அவருக்கு நடிக்க நிறைய வாய்ப்புகள் வரும்.

படத்தின் ஆரம்பம் முதல் இறுதிவரை நாயகன் ஹரிகுமாருடன் நடித்துள்ளார். இருவரும் வரும் காட்சிகள் மிக அருமையாக வந்திருக்கிறது. ஹரிகுமாருடன் மட்டுமல்ல இரண்டாவது நாயகியுடன்  காதல் காட்சிகளிலும் நடித்துள்ளார் என்றார் இயக்குனர்.

தகவல் : சென்னை அலுவலகம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நடிகர் ரிச்சர்ட் ரிஷி நடிப்பில் உருவாகும்...

2025-02-12 17:05:51
news-image

நடிகர் தேவ் நடிக்கும் 'யோலோ' படத்தின்...

2025-02-12 17:06:14
news-image

நடிகர் ரியோ ராஜ் நடிக்கும் 'ஸ்வீட்ஹார்ட்'...

2025-02-12 17:05:29
news-image

எஸ்.ஏ.சந்திரசேகர் நடிக்கும் 'கூரன்' திரைப்படத்தின் வெளியீட்டுத்...

2025-02-12 16:50:42
news-image

தமிழ்நாட்டு விஞ்ஞானி ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கை வரலாறு...

2025-02-12 16:51:14
news-image

பிரைம் வீடியோவில் வெளியாகும் கதிர் -...

2025-02-12 16:22:53
news-image

தமிழ் திரையுலக பிரபலங்கள் இணைந்து வெளியிட்ட...

2025-02-12 15:59:29
news-image

யோகி பாபு நடித்திருக்கும் 'லெக் பீஸ்'...

2025-02-12 14:51:36
news-image

'காதல் என்பது பொதுவுடமை' படத்தின் இசை...

2025-02-11 22:33:07
news-image

சாதனை படைத்து வரும் நடிகர் பிரதீப்...

2025-02-11 17:30:29
news-image

விக்ரம் பிரபு நடிக்கும் புதிய படத்தின்...

2025-02-11 17:20:45
news-image

நடிகர் லியோ. சிவக்குமார் நடிக்கும் 'டெலிவரி...

2025-02-11 17:19:29